திருநெல்வேலியிலிருந்து ஏறத்தாழ 50கி.மீ தொலைவிலும், களக்காட்டிலிருந்து இருந்து ஏறத்தாழ 6கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இயற்கை எழில்மிகுந்த இடம் தான் தலையணை அருவி.
சிறப்புகள் :
மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கை எழில்மிகுந்த இடம். நம்முடைய மனதிற்கு புத்துணர்ச்சி தருவதோடு மட்டுமல்லாமல் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாகவும் தலையணை அருவி திகழ்கிறது.
அமைதியான சூழலில் பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும் மலைப் பகுதியில் சிறு அருவிகளும், கண்ணாடி போல காட்சியளிக்கும் தண்ணீர் என பார்ப்பதற்கு ரம்மியமான காட்சிகள் தலையணை அருவியில் அமைந்துள்ளன.
இந்த அருவியில் உள்ள பாறைகள் பல வடிவங்களில் இருக்கும். பெரும்பாலான பாறைகள் கூழாங்கற்களைப் போன்று இருக்கும். இந்த அற்புதமான காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.
இங்கிருந்து சிறிது தூரம் சென்றால் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் உள்ளது. அங்கு பல அரிய வகை வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் விலங்குகள் உள்ளன.
தலையணை அருவியின் கீழ் பகுதியில் தேங்காய் உருளி அருவி உள்ளது. இந்த அருவி மரக் கூட்டங்களுக்கு நடுவே காண்போரின் கண்ணை கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்துள்ளது.
கோடை வெப்பத்திலிருந்து குளுமையை அனுபவிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
எப்படி செல்வது?
திருநெல்வேலியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
திருநெல்வேலியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத் தலங்கள் :
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்.
மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி.
பாபநாசம் நீர்வீழ்ச்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக