Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 26 டிசம்பர், 2019

என் படத்தை வைத்து மீம்ஸ் போடுபவர்களை "வரவேற்கிறேன்" -பிரதமர் மோடி


என் படத்தை வைத்து மீம்ஸ் போடுபவர்களை "வரவேற்கிறேன்" -பிரதமர் மோடி

 பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ட்விட்டரில் (Twitter) ஒரு பயனருக்கு மிகவும் சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார். உண்மையில், இந்த ட்விட்டர் பயனர் பிரதமரின் படம் குறித்து கருத்து தெரிவித்தார். அதாவது உங்களின் படத்தை வைத்து அதிக அளவில் மீம்ஸ் (Meme) செய்யப்படும் எனக் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, "உங்களை வரவேற்கிறேன்,  மகிழுங்கள்" எனப் பதில் அளித்துள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தை (Solar Eclipse) பிரதமர் மோடி பார்வையிட்டார். அதுகுறித்த படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் உள்ள ஒரு புகைப்படத்தை மேற்கோள் காட்டி, ஒரு ட்விட்டர் பயனர், "இப்போது இது படம் குறித்து மிம்ஸ்கள் உருவாக்கப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளார். அதற்கு தான் பிரதமர், "உங்கள் மீம்ஸ்களை வரவேற்கிறேன். மீம்ஸ் போட்டு மகிழுங்கள்" எனக் பதில் அளித்துள்ளார்.

Most welcome....enjoy https://t.co/uSFlDp0Ogm
— Narendra Modi (@narendramodi) December 26, 2019
பிரதமர் மோடி சூரிய கிரகணத்தைப் பார்த்தார். ஆனால் டெல்லியில் மேகமூட்டமான வானிலை காரணமாக அவரால் அதை நேரடியாகப் பார்க்க முடியவில்லை என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். இந்தியாவின் பிற இடங்களில் சூரிய கிரகணத்தை பலர் நேரடி பார்த்தனர். குறிப்பாக தமிழகத்தில் 90 சதவீதம் சூரிய கிரகணம் தென்பட்டது. அதாவது சென்னை உட்பட பத்துக்கு மேற்ப்பட்ட மாவட்டங்களில் சூரிய கிரகணம் தெரிந்தது.
"மற்ற இந்தியர்களைப் போலவே நானும் சூரிய கிரகணத்தை பார்க்க உற்சாகமாக இருந்தேன்" என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார். இருப்பினும், இங்கு மேகமூட்டமாக இருப்பதால் சூரிய கிரகணத்தை முழுமையாக என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் கோழிக்கோடு மற்றும் பிறபகுதிகளில்  காணப்பட்ட சூரிய கிரகணத்தை நேரடியாக ஸ்ட்ரீம் மூலம் பார்த்தேன். இதுக்குறித்து நிபுணர்களுடன் ஆலோசனை செய்தேன் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

Like many Indians, I was enthusiastic about #solareclipse2019.
Unfortunately, I could not see the Sun due to cloud cover but I did catch glimpses of the eclipse in Kozhikode and other parts on live stream. Also enriched my knowledge on the subject by interacting with experts. pic.twitter.com/EI1dcIWRIz
— Narendra Modi (@narendramodi) December 26, 2019
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியன் மறைக்கப்படும். அதாவது நிலவின் நிழல், பூமியின் மீது விழும். இது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே, சூரியனை நிலவு முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் என்று கூறப்படுகிறது. இந்த சூரிய கிரகணமானது காலை 8:00 மணி முதல் 11:16 மணி வரை 97.3 சதவீதம் முழுமையாக சூரியனை மறைக்கிறது.
இந்த சூரிய கிரகணத்தை குறிப்பாக கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் பார்க்க முடியும். மற்ற இடங்களில் பகுதி சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
சூரியனை நிலவு மறைக்கும் அற்புத காட்சிதான் சூரிய கிரகணம். நிலவால் சூரியனை முழுவதுமாக மறைக்க முடியாது. எனவே சுற்றி இருக்கும் பகுதி நெருப்பு வளையம் போல் தெரியும். இந்த நிகழ்வின்போது வெளியே வரக்கூடாது என்பதல்ல. பார்த்து ரசிக்கலாம். ஆனால் வெறும் கண்னால் பார்க்கக்கூடாது. ‘மைலார்’ கண்ணாடி மூலம் பார்க்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக