Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 26 டிசம்பர், 2019

ஓட்டுனர்களை சமாதானம் செய்ய சென்ற சப் இன்ஸ்பெக்டருக்கு நடந்த பரிதாபம்!

ஓட்டுனர்களை சமாதானம் செய்ய சென்ற சப் இன்ஸ்பெக்டருக்கு நடந்த பரிதாபம்!



ன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதியை சேர்ந்தவர் அருளப்பன். இவர்  கேரள மாநிலம் கண்ணூரில் சிஆர்பிஎப் பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கிறிஸ்துமஸ்  பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊருக்கு பேருந்தில் சென்றுள்ளார்.
அப்போது அந்த பேருந்தின் மீது வைக்கோல் ஏற்றிவந்த டெம்போ மோதியதாக தெரிகிறது. இதனால் இரு வாகன ஓட்டுனர்களுக்கும் பிரச்னை எழுந்தது. பிரச்சனை பெரிதாவது போல தெரிந்ததால் சக பயணிகளுடன் அருளப்பனும் சமாதானம் செய்ய கீழே இறங்கி பேசி வந்தனர். அப்போது பின்னர் வந்த இன்னொரு டெம்போ வாகனம் வைக்கோல் டெம்போ மீது  மோதியது.
அந்த சமயம் வைக்கோல் வாகனத்தின் முன்னால் நின்றிருந்த அருளப்பன் உள்ளிட்ட சிலர் தூக்கி வீசப்பட்டனர். இதில் அருளப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். அடிபட்ட சிலர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மறைந்த அருளப்பனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும், விஜயராணி என்கிற மனைவியும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக