திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள
அருவிதான் குற்றால அருவி. இது திருநெல்வேலியில் இருந்து ஏறத்தாழ 66கி.மீ
தொலைவிலும், தென்காசியில் இருந்து ஏறத்தாழ 6கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய
சுற்றுலாத்தலம் ஆகும்.
குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது
அருவிகள் அமைந்துள்ளன.
1. பேரருவி
2. ஐந்தருவி
3. சிற்றருவி
4. பாலருவி
5. புலியருவி
6. பழத்தோட்டஅருவி
7. செண்பகாதேவியருவி
8. பழையக்குற்றால அருவி
9. தேனருவி.

1. பேரருவி
இது பொதுவாக குற்றால அருவி என
அழைக்கப்படுகிறது. இந்த அருவிகளில் இருந்து கிளம்பும் சாரல் வெகுதொலைவு வரை
தென்படும். குற்றால அருவி நீர் பல்வேறு மூலிகைகளில் இருந்து கலந்து வருகிறது.
ஆதலால், இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
2. சிற்றருவி
குற்றால மெயின் அருவியில் இருந்து
சிறிது தூரத்துக்கு காலாற நடந்து சென்றால் இந்த அருவி இருக்கிறது.
3. செண்பகாதேவி அருவி
பேரருவியில் இருந்து மலையில் 1கி.மீ.
தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து
கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து அருவியாக கொட்டுகிறது.
4. தேனருவி
குற்றால மெயின் அருவியில் இருந்து
ஏறத்தாழ 1கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில்
உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது.

5. ஐந்தருவி
குற்றாலத்தில் இருந்து சுமார்
5கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து உருவாகி
சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது.
6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)
அடர்ந்த வனத்தின் நடுவே இயற்கை எழில்
கொஞ்சும் இரு அருவிகள் அங்கே உள்ளன. அதற்குப் பழத்தோட்ட அருவி என்று பெயர். இங்கு
முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.
7. புலியருவி
குற்றாலத்தில் இருந்து சுமார்
2கி.மீ., தொலைவில் உள்ளது. சிறுவர்கள் குளிக்க புலி அருவி மிகவும் பாதுகாப்பானது.
8. பழைய குற்றாலம் அருவி
குற்றால மெயின் அருவியில் இருந்து
ஏறத்தாழ 8கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அழகனாற்று நதியில் அமைந்துள்ளது இந்த
அருவி.
9. பாலருவி
இது தேனருவி அருகே அமைந்துள்ளது. இந்த
அருவிப் பகுதிகளில் இருந்து கொட்டும் தன்ணீரானது அங்கு வீசும் காற்றில் கலந்து
துளித்துளியாக பறந்து வந்து முகத்தில் படும்போது கிடைக்கும் ஆனந்தத்துக்கு எல்லையே
கிடையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக