Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 டிசம்பர், 2019

தோசை... சப்பாத்தி... ஆப்பம்... உங்களின் கைவண்ணத்தை காட்ட...!

 Image result for சமையல் ருசியாக வர குட்டி... குட்டி... டிப்ஸ்
ஹோட்டலில் சுடுவதுபோல் கல்தோசை சுடுவது எப்படி?

 பச்சரிசியையும், உளுந்தையும் மூன்றுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் ஒன்றாக போட்டு 2 மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

 தோசைக்கல்லில் மாவை ஊற்றிய பிறகு எண்ணெயை விட்டு தோசையைத் திருப்பிப் போட்டதும் லேசாக தோசையின் மீது தண்ணீர் தெளித்து, உடனே மறுபடியும் திருப்பிப் போட்டு கல்லிலிருந்து எடுத்துவிடவும். இப்படி செய்தால் ஹோட்டலில் சுடும் தோசையை போலவே இருக்கும்.

ஆப்பம் மிருதுவாக வர என்ன செய்ய வேண்டும்?

 புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி தலா ஒரு ஆழாக்கு, ஒரு கைப்பிடி உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்து... அரைக்கும்போது தேங்காய் துருவல் ஒரு கப், வெந்த சாதம் ஒரு கரண்டி சேர்த்து அரைத்து சுட்டால்... ஆப்பம் மிருதுவாக இருக்கும்.

சப்பாத்தி சுடுவதற்கும், தோசை சுடுவதற்கும் தனித்தனி தோசைக்கல் தேவையா?

 சப்பாத்தி சுடுவதற்கும், தோசை சுடுவதற்கும் தனித்தனி தோசைக்கல்லை பயன்படுத்துவது நல்லது. அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும், கனமில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும்.

பூரி உப்பி வர வேண்டுமா?

 மாவு பிசையும்போது கோதுமை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மக்காச்சோளமாவும், அரை டேபிள்ஸ்பூன் ரவையும், அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து பிசைந்து செய்தால் பூரி உப்பி வரும்.

கூட்டு நல்ல சுவையில் இருக்க என்ன செய்ய வேண்டும்?

 எந்த வகை கூட்டு செய்தாலும் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், 2 பச்சை மிளகாய், கொஞ்சம் சீரகம் சேர்த்து அரைத்துக் கலக்கினால், கூட்டு... செம டேஸ்ட்டு!

 வறுத்த நிலக்கடலையை சிறிது பொடியாக்கி பீன்ஸ், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.

 தக்காளி சூப் எப்படி செய்தாலும் சுவையாகத்தான் இருக்கும். ஆனால் அதில் அதிகமான மணம் இருக்க புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, அரைத்து அதனை தக்காளி சூப்புடன் சேர்த்தால் வாசனையாக இருக்கும்.

 கீரையை சமை‌க்கு‌ம்போது சர்க்கரையை சிறிது சேர்த்தால், சத்தும் போகாது. நிறமும் மாறாது.

 கீரை, வெண்டைக்காய் போன்றவை முழுவதுமாக வதங்கிய பிறகு உப்பு சேர்க்க வேண்டும். ஏனெனில் அது முழுவதுமாக வதங்கியதும் அதன் உண்மையான அளவு தெரியும்.

 நெய்யை உருக்கிய பின்னர்தான் சாப்பிட வேண்டும். கெட்டி நெய்யாக சாப்பிட்டால் ஜீரணமாவது கடினமாக இருக்கும்.

கேசரி செய்யும்போது தண்ணீரின் அளவைக் குறைத்து, பால் சேர்த்துக் கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக