ஆத்ம பலத்தை விட... அறிவு பலம் கொண்டு செயல்படும் கன்னி ராசி அன்பர்களே...!!
ராசி அதிபதியான புதன், கேந்திர பலத்துடன் நான்காமிடத்தில் இருக்க இந்த புதிய வருடம் துவங்க இருக்கின்றது. இதுவரை செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் புதிய நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயமான பலன்கள் ஏற்படும்.
புதிய மனை மற்றும் வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். சுபக்காரியங்கள் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும்.
எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் சிறு காலதாமதத்திற்கு பிறகு சாதகமாக அமையும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது தேவையற்ற மனக்கசப்புகளை தவிர்க்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு கடின முயற்சிக்கு பின் வெற்றி கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். கட்சி சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல்களின் மூலம் இலாபகரமான சூழல் உண்டாகும். செலவுகள் யாவும் கட்டுக்குள்ளேயே இருந்து வரும். பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் கையெழுத்திடும்போது ஒருமுறைக்கு, இருமுறை படித்து கையெழுத்திடவும்.
வியாபாரிகளுக்கு :
பங்கு வர்த்தகத்தில் இலாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். இரும்பு, கட்டிடப் பொருட்கள் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு தன்னுடைய தொழிலில் கவனம் வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான காலமாக அமையும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இழுபறியான சூழல் உண்டாகும்.
பெண்களுக்கு :
கணவன்-மனைவி உறவில் சிறு சிறு பிரச்சனைகளுக்கு பின் அமைதி கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்கவும். புதல்வர்களுக்கான சுபக்காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
தகவல் தொழில்நுட்ப துறையினருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பணிகளை செய்து முடித்தாலும் சில நேரங்களில் நல்ல பெயர் எடுப்பதற்கு மிகுந்த தடைகள் ஏற்படும். தனிப்பட்ட நபர்களின் வருமானத்தை உயர்த்த புது வழி கிடைக்கும். அரசுத்துறையில் ஆதாயங்கள் கிடைத்தாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு :
கலைத்துறையினருக்கு வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆயினும் வருமானத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
பரிகாரம் :
வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக