ஜெயலலிதாவுக்கு சொந்தம் என்று கூறப்படும் கொடநாடு
உள்ளிட்ட சொத்துக்கள் தனக்கும் சொந்தமானது என சசிகலா தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து
குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் சசிகலா. இந்நிலையில் அவர் வாங்கி குவித்த
சொத்துக்கள் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு அமலாக்கத்துறைக்கு சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி
தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000
ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா பல்வேறு சொத்துகள் வாங்கிள்ள தகவல் முன்னரே
வெளியானது. தற்போது இதனைத்தொடர்ந்து மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்
வெளியானது.
ஆம்,
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற
ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.237 கோடியை சசிகலா கடனாக கொடுத்ததாக தகவல் ஒன்று வருமான
வரித்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரசு
கட்டடங்கள், அரசு உதவி பெறும் பள்ளி கட்டடங்கள் மற்றும் அரசு டெண்டர் எடுத்த
காண்டிராக்டர்களுக்கு ரூ.240 கோடி கடனாக கொடுக்க பேரம் பேசப்பட்டு, அதில் ரூ.237
கோடியை செல்லாத ரூபாய் நோட்டுகளாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த
பணத்திற்கு ரூ.7.5 கோடி கமிஷனாக பெறப்பட்டது. பணத்தை ஒரு வருடத்திற்குள் திருப்பி
தர வேண்டும் அப்படி இல்லையென்றால் 6% வட்டி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த
கடன் வழங்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில்
இதற்கு விளக்கம் அளிக்கும் படி வருமான வரித்துறை கோரியிருந்த நிலையில் இதற்கு
பதில் அளிக்கும் விதமாக சசிகலா தரப்பில் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பணமதிப்பிழப்பு நோட்டு பற்றியும், அதை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்கள்
பற்று எந்த தகவலும் தெரியாத என தெரிவித்துள்ளார்.
மேலும்,
ஜெயலலிதாவுக்கு சொந்தம் என்று கூறப்படும் கொடநாடு எஸ்டேட், எம்.ஜி.ஆர் மற்றும்
ஜெயா பிரிண்டர்ஸ், ஜெயா பார்ம் ஹவுஸ், ஜெ.எஸ் ஹவுசின்ஹ் டெவலப்மெண்ட், ஜெய் ரியல்
எஸ்டேட், கிரீன் பார்ம் ஹவுஸ் ஆகிவற்றில் பங்கு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக