பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கடந்த இரண்டு
நாட்களுக்கு முன்பு அவரது ஆல்வொராடா மாளிகையில் குளியலறைக்கு சென்ற போது அவர்
திடீரென அங்கு வழுக்கி கீழே விழுந்து அவரது தலை, தரையில் அடிபட்டதால்
சிகிச்சைக்காக பிரேசிலியாவில் உள்ள ஆயுதப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு
10 மணி நேரம் சிகிச்சையில் வைத்தனர்.
பின்னர், தீவிர சிகிச்சைக்குப் பின்
நேற்று வீடு திரும்பிய அவர், பேண்ட் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பேசும்போது.
அன்று நான் என்ன செய்தேன் என்பது எனக்கு தெரியவில்லை, ஆனால் நான் ஸ்லிப்பாகி
என்னோட முதுகு பக்கம் கீழே விழுந்ததால் பின்புறம் அடிபட்டது, இதனால் அதுக்கடுத்து
என்ன நடந்தது என்று தெரியாது. பின்னர் பழைய நினைவுகளை இழந்ததாகவும், சிகிச்சைக்குப்
பிறகு தான் படிப்படியாக தனது நினைவுகளை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
இதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல
வேண்டும் என கூறி, தற்போது நான் நலமாக இருப்பதாகவும், இனி சற்று கவனமாக என்னை
நானே கவனித்து கொள்ளப்போகிறேன் என தெரிவித்தார். மேலும், இதற்கு முன்பாக
கடந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது கத்தியால் குத்தப்பட்டு 4
அறுவை சிகிச்சைகள் செய்துள்ளனர். அதேபோல இந்த மாத தொடக்கத்தில், தோல்
புற்றுநோய்க்கு பரிசோதிக்கப்பட்டதாக கூறினார். இதனால் அவர் கடந்த ஜனவரி மாதம்
அதிபராக பதவி ஏற்றத்தில் இருந்தே பல உடல் நலபிரச்சனையில் அவதிப்பட்டு வருவது
தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக