நம் வீட்டு பூஜை ஆனாலும் சரி, கோவில்
சென்று வழிபடுவது என்றாலும் சரி நமது பூஜை தட்டில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும்
பொருள் தேங்காய் மற்றும் வாழைபழம் ஆகும். இவ்விரண்டையும் நாம் படைப்பதற்கு காரணம்
இவைதான்,
அதாவது,
வாழைப்பழத்திற்கு கொட்டை கிடையாது. அதாவது மற்ற அனைத்து பழங்களுக்கும் கொட்டை
இருக்கும். அவை நாம் சாப்பிட்டு போட்டால் வளர்ந்துவிடும். ஆனால் வாழைப்பழத்தை
அப்படியே புதைத்தாலும் வளராது.
அதே
போல தான் தேங்காயையும் அப்படியே புதைத்தால் வளராது. இவை இரண்டையும் நாம்
கடவுளுக்கு படைப்பது எதற்கென்றால் இவை இரண்டையும் போல மறு பிறவி இல்லாத வரம்
வேண்டும். அடுத்த பிறவி வேண்டாம் என கடவுளிடம் நாம் மறைமுகமாக வேண்டிக்கொள்கிறோம்.
மற்ற
பழங்கள் நாம் தின்று போட்ட கொட்டைகளில் இருந்து மரம் வளர்ந்து அதன் மூலம் பழம்
கிடைத்து அதனை சாமிக்கு படைத்தால் அது எச்சில் பழம் போல கருதப்படும். ஆனால்
வாழைமரமும், தென்னை மரமும் பழத்தின் மூலம் வளருவதில்லை. மாறாக அவை வாழைக்கன்னு,
தென்னங்கன்னு மூலமாக வளரும்.ஆதலால் தான் வாழைப்பழமும், தேங்காயும் பூஜை
பொருட்களில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக