நித்தியானந்தா மீது கடத்தல் மற்றும்
சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை
போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம்
மூடப்பட்டது.இந்த நிலையில் அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் கர்நாடகா
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதாவது அவர் தாக்கல் செய்த
வழக்கில்,நித்தியானந்தா மீதான வழக்குகளை ராம் நகர் நீதிமன்றத்திலிருந்து
மாற்றக்கோரிக்கை விடுத்தார்.இந்த வழக்கை விசாரித்த
உயர்நீதிமன்றம், நித்தியானந்தா எங்கிருக்கிறார் என 18-ஆம் தேதிக்குள்
அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
மேலும் ராம் நகர்
நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க தடை விதித்தது.ஆனால் வேறு வழக்குகள் காரணமாக
இந்த வழக்கினை நீதிமன்றம் நேற்று எடுக்கவில்லை.
ஜனவரி
10 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்
நித்தியானந்தா வழக்குகளை விசாரிக்க ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்திற்கு ஏற்கனவே
விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே
கர்நாடக சிஐடி போலீசார் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிந்து
தெரிவிப்பதற்காக புளுகார்னர் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு சர்வதேச காவல்துறையான
இன்டர்போலிடம் கோரிக்கை வைக்குமாறு டெல்லி சிபிஐயிடம் மனு தாக்கல்
செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக