Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 23 டிசம்பர், 2019

ஐபோனில் போனில் முழு பக்கத்தையும் ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது எப்படி? இதோ வழிமுறைகள்!

ஸ்கிரீன் ஷாட் என்பது மொபைலில் காணப்படும் ஒரு எளிமையான அம்சமாகும், நாம் போனில் பார்க்கும் ஏதாவது ஒன்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும்போது அல்லது அதை நம்முடைய ஸ்மார்ட்போன்களில் சேமிக்க விரும்பும்போது நாம் அனைவரும் இந்த அம்சத்தைப் பயன்படுத்துகிறோம்.

ஸ்க்ரீன்ஷாட் செயல்முறை மிகவும் எளிமையானது. பொதுவாக உங்கள் போனின் சில பட்டன்களை அழுத்துவதால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியும். இருப்பினும், ஒரு சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஒரு படி மேலே சிந்தித்து ஸ்க்ரோலிங் ஸ்கிரீன் ஷாட்டை எடுக்க பயனர்களை அனுமதித்தனர். ஆப்பிள் போனிலும் இந்த வசதி உண்டு. ஆனால் இதன் செயல்முறை ஆண்ட்ராய்டு போனைக் காட்டிலும் சற்று கடினமானது. எனவே, ஐபோன் அல்லது ஐபாடில் முழு பக்க ஸ்கிரீன் ஷாட்டைப் எடுக்க ஒரு வழியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இதோ உங்களுக்கான வழிகாட்டி.

முன் நிபந்தனை:

உங்கள் போனில் iOS அல்லது iPadOS ன் சமீபத்திய பதிப்பு(Latest version) இருக்கவேண்டும்.

ஐபோன் / ஐபாடில் முழு பக்க ஸ்கிரீன் ஷாட்டை எடுப்பதற்கான வழிமுறைகள்:

1. நீங்கள் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க விரும்பும் வலைப்பக்கம் அல்லது பகுதிக்கு செல்லுங்கள்.

2. வால்யூம் மற்றும் பவர் பட்டனை ஒன்றாக பிடித்து அழுத்தி வழக்கமான முறையில் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கவும். உங்களுடையது ஐபோன் 8 அல்லது அதற்கு முந்தைய மாடல் போன் என்றால், ஹோம் பட்டன் மற்றும் பவர் பட்டன் ஆகியவற்றை ஒன்றாக பிடித்து அழுத்தி ஸ்க்ரீன் ஷாட் எடுக்கவும்.

3. ஸ்க்ரீனின் கீழ் பகுதியில் இடது மூலையில் “இமேஜ் ப்ரீவ்யூ”(Image Preview)வை அழுத்தவும்.

4. இதனால் உங்கள் ஸ்க்ரீன் ஷாட் இமேஜ் எடிட்டரில் திறக்கப்படும். அதில் மேல் வலது மூலையில் “ஃபுல் பேஜ்”(Full Page ) விருப்பத்தை தேர்வு செய்யவும்.

5. ஸ்க்ரீன் ஷாட்டில் நீங்கள் சேமிக்க விரும்பும் பகுதியை தேர்வு செய்து “கிராப்”(Crop ) ஐகானைத் தட்டவும்.

6. இதன்பிறகு உங்கள் போனில் இதனை சேமித்துக் கொள்ளலாம் அல்லது நேரடியாக உங்கள் தொடர்பில் உள்ளவர்களுக்கு அல்லது மற்ற செயலிகளுக்கு PDF வடிவத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.

7. ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்து கொள்ள, மேல் வலது மூலையில் இருக்கும் “ஷேர்”(Share ) ஐகானைத் தட்டி, தொடர்பைத் தேர்வு செய்யவும்.

8. ஸ்கிரீன்ஷாட்டைச் சேமிக்க, மேல் இடதுபுறத்தில் இருக்கும் “டன்”(Done ) ஐகானைத் தட்டவும், பின்பு கோப்புகளை சேமிக்க “சேவ் PDF” (Save PDF) என்பதைத் தட்டவும்.

9. இடத்தை தேர்ந்தெடுத்து “சேவ்”(Save) ஐகானைத் தட்டவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக