வங்கதேசத்தில் நுழையும் இந்தியர்கள்
திருப்பி அனுப்பப்படுவார்கள் என வங்கதேச அமைச்சர் ஒருவர் தெரிவித்து இருப்பது
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்தியாவிற்குள்
சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானியர்களை திருப்பி
அனுப்பும் குடியுரிமை சட்டம் சமீபத்தில் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து
இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது
இந்த
நிலையில் வங்கதேசம் அமைச்சர் அப்துல் மோனன் என்பவர் இந்தியாவுக்கு எழுதிய
கடிதத்தில் ’உரிய செயல் முறைகளை பின்பற்றாமல் வங்கதேசத்திற்கு யாரும் நுழைய
முடியாது என்றும், வங்கதேச எல்லை வழியாக இந்தியர்கள் எங்கள் நாட்டுக்குள்
நுழைந்தால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்
அதேபோல்
வங்கதேச குடிமக்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தால் அவர்களை
திரும்பப்பெற தயார் என்றும் தங்கள் நாட்டுக் குடிமக்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்தால்
அவர்களின் பட்டியலை உடனே அனுப்பி வைக்குமாறும் அவர்களை தங்கள் நாடு மீண்டும்
ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் இந்தியாவுக்கு எழுதிய கடிதத்தில்
தெரிவித்துள்ளார்
மேலும்
இந்தியா, வங்கதேசம் ஆகிய இரு நாடுகளும் மிக இனிமையான நட்புரிமையை கொண்ட நாடு
என்றும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வங்கதேசம் தலையிடாது என்றும் அவர்
தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக