Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 23 டிசம்பர், 2019

ஹே Jio... இந்த வாங்கிக்கோ BSNL-ன் சிக்ஸர்! இனி தினமும் 3 ஜிபி; வேலிடிட்டியை சொன்னா நம்புவீர்களா?

ரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் சிக்ஸர் திட்டத்தில் அதிரடி மாற்றம் ஒன்றை நிகழ்த்தியுள்ளது. அதென்ன மாற்றம்? இந்த பிளானின் விலை என்ன? என்பதை பற்றிய தொகுப்பே இது.
அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டத்தை திருத்தியுள்ளது, இது பிஎஸ்என்எல் சிக்ஸர் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. முன்னதாக செல்லுபடியாகும் காலத்திற்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்த இந்த ரூ.666 ஆனது தற்போது கூடுதலாக 1ஜிபி அளவிலான டேட்டாவுடன் மொத்தம் 3ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

அடுத்த 9 நாட்களுக்கு மட்டுமே!

கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கூடுதலாக கிடைக்கும் 1ஜிபி அளவிலான டேட்டாவானது வருகிற டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும். அதற்கு பின் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு வழக்கமான 2ஜிபி அளவிலான தினசரி டேட்டாவே கிடைக்கும்.

வேலிடிட்டியும் அதிகரிக்கப்பட்டுள்ளது!

2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நிறுவனத்தின் இந்த சிக்ஸர் 666 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 122 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் அறிமுகமானது, ஆனால் தற்போது இந்த திட்டம் 134 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது.

மற்ற நன்மைகள் பற்றி?

டேட்டாவை தவிர்த்து மற்ற நன்மைகளை பொறுத்தவரை, இந்த ரூ.666 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது பயனர்களுக்கு இலவச குரல் அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது, ஆனால் அது ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்கிற வரம்பினை கொண்டுள்ளது. உடன் நீங்கள் தினசரி 100 எஸ்எம்எஸ்களையும் பெறுவீர்கள்.

இந்த திருத்தப்பட்ட ரூ .666 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது டிசம்பர் 23, 2019 (அதாவது இன்று) முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இது அனைத்து பிஎஸ்என்எல் வட்டங்களிலும் கிடைக்கும் என்று டெலிகாம்டாக் தெரிவித்துள்ளது.

ரூ.109 ப்ரீபெய்ட் திட்டத்தின் அறிமுகம்!

ரூ.666 தவிர்த்து, பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் ரூ.109 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இது 90 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் "மித்ரம் பிளஸ்" என்று அழைக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களுக்கு மொத்தம் 5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது, உடன் இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் 250 நிமிடங்கள் என்கிற அழைப்பு நன்மையையும் வழங்குகிறது. கொடுக்கப்பட்ட வாய்ஸ் நிமிடங்கள் தீர்ந்தவுடன், பயனர்கள் ஆன்-நெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளுக்கு வினாடிக்கு 1.2 பைசா என்கிற கட்டணம் வசூலிக்கப்படும்.

ரூ.118, ரூ.187, மற்றும் ரூ.939 மீது நிகழ்த்தப்பட்ட திருத்தங்கள்!

முன்னதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் சில ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடிகளையும் திருத்தியது. ஆனால் அந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டி திருத்தமானது தற்போது வரையிலாக கேரளாவில் மட்டுமே அணுக கிடைக்கிறது, ஏனெனில் கேரளம் என்பது நிறுவனத்தின் மிகப்பெரிய வட்டங்களில் ஒன்றாகும்.

திருத்தங்களை பொறுத்தவரை, ரூ.118, ரூ.187, மற்றும் ரூ.939 ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டி மாற்றம் அடைந்துள்ளது. முன்னதாக 28 நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்கிய ரூ.118 திட்டமானது, தற்போது 21 நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 500MB டேட்டா, 250 நிமிட குரல் அழைப்புகள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் இலவச பிஆர்பிடி போன்ற நன்மைகளை வழங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக