Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 23 டிசம்பர், 2019

டெபிட் கார்டுலாம் இருக்கா இல்லையா?

ந்தியாவில் பயன்பாட்டில் உள்ள டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு இந்தியாவில் ரொக்கப் பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. தேநீர் முதல் மொபைல் போன் வரை அனைத்துப் பொருட்களையும் மக்கள் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கத் தொடங்கிவிட்டனர். அதற்கான தொகையையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்துகின்றனர். இதனால் நாளுக்கு நாள் டெபிட் கார்டுகளின் பயன்பாடு குறைந்து வருகிறது. மேக்னடிக் ஸ்ட்ரிப் கார்டுகளை வங்கிகள் கட்டாயமாக்கியதாலும் டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.

அக்டோபர் மாத நிலவரப்படி, இந்தியாவில் 84.3 கோடி டெபிட் கார்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. ஆனால் 2018ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்த டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை 99.8 கோடியாகும். இது 15 சதவீத வீழ்ச்சியாகும். மேக்னெஸ்டிக் ஸ்ட்ரிப் கார்டுகளாக மாற்றும் முயற்சியில் 15.5 கோடி டெபிட் கார்டுகள் இல்லாமல் போயுள்ளதாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். செயலற்ற வங்கிகக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையில் பயன்படுத்தப்படாத டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளது.

நிறுவனங்களில் வேலை பார்க்கும் பணியாளர்கள் ஊதியம் பெறுவதற்கு வங்கிக் கணக்கு தொடங்கப்படுகிறது. பின்னர் அவர்கள் வேறு பணிக்குச் செல்லும்போது அங்கு புதிய ஊதிய வங்கிக் கணக்கு தொடங்கப்படுகிறது. இதனால் இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கு பயன்படுத்தப்படாமல் முடங்கி விடுகிறது. அவ்வாறாக நீண்ட காலமாக செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் வங்கிக் கணக்குகள் நீக்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் ஜன் தன் வங்கிக் கணக்குகள் போதிய அளவில் பயன்படுத்தப்படாததாலும் டெபிட் கார்டுகளின் பயன்பாடும் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

முன்னதாக வேர்ல்டு லைன் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், ஜூலை - செப்டம்பர் காலாண்டு முடிவில் மொத்தம் 83.60 கோடி டெபிட் கார்டுகளும், 5.3 கோடி கிரெடிட் கார்டுகளும் மக்களிடம் புழக்கத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2018 செப்டம்பர் மாதத்திலிருந்து 2019 செப்டம்பர் மாதம் வரை டெபிட் கார்டுகளின் எண்ணிக்கையில் 15.40 கோடி குறைந்துள்ளது. இருப்பினும், இக்காலகட்டத்தில் புதிதாக 1.1 கோடி கிரெடிட் கார்டுகள் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக