Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 23 டிசம்பர், 2019

Jio அதிரடி அறிவிப்பு! இனிமேல் Hotstar முற்றிலும் இலவசம்; எந்த திட்டத்தில்? யாருக்கெல்லாம் கிடைக்கும்?


ருவழியாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதன் ஜியோ ஃபைபர் பயனர்களுக்கான OTT ஆப்களின் சந்தா குறித்து சில தெளிவான விளக்கங்களை நமக்கு வழங்கியுள்ளது. நினைவூட்டும் வண்ணம், இந்த ஆண்டு ஆகஸ்டில் நிறுவனத்தின் ஜியோ ஃபைபர் வணிகத் திட்டங்களானது OTT ஆப்ஸ் சந்தாக்களுடன் வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்போடு சரி, அது சார்ந்து வேறு எந்தவிதமான கூடுதல் விவரங்களும், விளக்கங்களும் வெளியாகவில்லை. அதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக ஈடுகட்டும் வண்ணம் தற்போது ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து அதிகாரப்பூர்வ அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
யாருக்கெல்லாம் இலவச OTT சந்தா கிடைக்கும்?
டெலிகாம்டால்க் வெளியிட்டுள்ள அறிக்கையானது எந்தெந்த ஜியோ ஃபைபர் பயனர்களுக்கு ஓடிடி சேவைகளுக்கான இலவச அணுகல் கிடைக்கும் என்கிற தகவலை நம்முடன் பகிர்ந்துள்ளது. அதன்படி, குறைந்த பட்சம் ஜியோ ஃபைபர் கோல்ட் பிளானை பயன்படுத்தும் பயனர்களுக்கு நான்கு பிரீமியம் OTT களுக்கான இலவச சந்தாக்கள் அணுக கிடைக்கும். அதாவது ஜியோ ஃபைபர் கோல்ட், டயமண்ட், பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நான்கு பிரீமியம் OTT களுக்கான இலவச சந்தாக்கள் அணுக கிடைக்கும் என்று அர்த்தம்.
புதிய ஜியோ ஃபைபர் இணைப்பை பெறுவதற்கான சரியான நேரம் இதுதான்!

ஜியோஃ பைபர் பிளாட்பார்மில் கூடிய விரைவில் பல OTT சந்தாக்கள் வரப்போவதாகவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. இந்த சந்தாக்கள் ஆனது ஜியோ ஃபைபர் பயனர்களுக்கு ஜியோ 4 கே செட்-டாப் பாக்ஸ் வழியாக வழங்கப்படும், மேலும் இது பல்வேறு நகரங்களில் உள்ள பயனர்களுக்கு அணுக கிடைக்கும். ஜியோ அறிவித்துள்ள இந்த இலவச OTT சேவை சந்தாக்களை மனதில்கொண்டாமல், ஒரு புதிய JioFiber இணைப்பை பெறுவது என்பது இப்போது அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்றே கூறலாம்.
இது ஜியோவின் அதிகாரப்பூர்வ தகவலா?
தற்போது ரிலையன்ஸ் ஜியோ அதன் முன்னோட்ட சலுகையின் கீழ் இருந்த ஜியோ ஃபைபர் பயனர்களை கட்டண திட்டங்களுக்கு மாற்றும் பணியில் உள்ளது. ஒவ்வொரு JioFiber பயனரும் இந்த மாத இறுதிக்குள் கட்டண திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள். ஜியோ நிறுவனம் அதன் ஃபைபர் சேவையின் வணிகத் திட்டங்களை அறிவித்தபோது, அதிக அளவிலான விவரங்களை வழங்கவில்லை. ஆனால் மெதுவாக, ஜியோ ஃபைபர் சேவையானது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி அறிந்து கொண்டோம். இப்போது, JioFiber கட்டண திட்ட பயனர்களுக்கு என்னென்ன OTT சேவை சந்தாக்கள் வழங்கப்படுகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை டெலிகாம்டால்க் வெளியிட்டுள்ளது.
இலவச ஹாட்ஸ்டார் சேவை!
ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பயனர்கள் தங்கள் ஜியோ ஃபைபர் திட்டத்தின் ஒரு பகுதியாக ஹாட்ஸ்டார், சோனிலிவ், வூட் மற்றும் ஜியோசினிமா சந்தாக்களை அணுகலாம். மேலும் ZEE5 மற்றும் SunNXT சந்தாக்களும் வரும் நாட்களில் வழங்கப்படும் என்றும் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. ஹாட்ஸ்டாரைப் பொறுத்தவரை, ஜியோவானது ரூ.365 மதிப்புள்ள ஹாட்ஸ்டார் விஐபி மெம்பர்ஷிப்பை வழங்குகிறது. இந்த இடத்தில் ஆண்டுக்கு ரூ.999 செலவாகும் முழு அளவிலான ஹாட்ஸ்டார் பிரீமியம் மெம்பர்ஷிப்பையும், ரூ.365 சந்தாவையும் குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மொபைல் / டிவி / டெஸ்க்டாப் வழியாக பயன்படுத்த முடியுமா?
ரிலையன்ஸ் ஜியோ செட்-டாப் பாக்ஸ் ஆனது ஜியோடிவி+ என்கிற ஆப் உடன் வருகிறது, தவிர மேலே கூறப்பட்டுள்ள OTT ஆப்களை சந்தாக்களை STB வழியாகவும் பெறலாம். அடிப்படையில், JioTV+ என்பது பல்வேறு ஆப்களின் உள்ளடக்கத்தை ஒன்றாகக் கொண்டுவரும் உள்ளடக்க திரட்டல் தளமாகும். மேலும், Jio STB மேலே குறிப்பிடப்பட்ட OTT ஆப்களுடன் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இந்நேரத்தில், குறிப்பிட்டுள்ள OTT சந்தாக்களை மொபைல் / டிவி / டெஸ்க்டாப் வழியாக பயன்படுத்த முடியுமா என்பது பற்றிய தகவல் எதுவும் எங்களிடம் இல்லை.
சிறந்த ஜியோ ஃபைபர் திட்டம் எது?
ரிலையன்ஸ் ஜியோவிடம் தற்போது மொத்தம் ஆறு ஜியோ ஃபைபர் திட்டங்கள் உள்ளன. அவை ரூ.699 முதல் தொடங்கி ரூ.849, ரூ.1,299, ரூ.2,499, ரூ.3,999 மற்றும் ரூ.8,499 வரை நீள்கின்றன. ரூ.699 மதிப்புள்ள அடிப்படை திட்டமானது ஜியோ சினிமா மற்றும் ஜியோசாவ்ன் சந்தாக்களுடன் வருகிறது. ரீசார்ஜ் செய்யும் முதல் மூன்று முறை மட்டுமே ஜியோசினிமா மற்றும் ஜியோசாவ்ன் சந்தாக்களைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த "மூன்று மாதங்கள் மட்டுமே" என்கிற முறையானது ரூ.849 ஜியோ ஃபைபர் திட்டத்திற்கும் பொருந்தும் ஆனால் இதில் ஹாட்ஸ்டார் போன்ற பிரீமியம் ஆப்களுக்கான அணுகல் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
ஜியோ ஃபைபர் கட்டணத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தால்...
எனவே ஜியோ ஃபைபர் சேவையின் கேள் கிடைக்கும் சிறந்த விருப்பம் ரூ.849 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்கள் தான் என்பது வெளிப்படை. இருப்பினும் நீங்கள் சிறந்த நன்மைகளை அனுபவிக்க ரூ.1,299 மதிப்புள்ள ஜியோ ஃபைபர் கோல்ட் திட்டத்தை பெறுமாறு பரிந்துரைக்கிறோம். ஜியோ ஃபைபர் நெட்வொர்க்கின் கீழ் OTT சேவை சந்தா பட்டியல் வளரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் ஜியோ ஃபைபர் சேவையின் கட்டண திட்டங்கள் திருத்தப்பட்டு இன்னும் கவர்ச்சிகரமான நன்மைகள் வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக