Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 டிசம்பர், 2019

புத்திசாலி சேவல்!

Image result for புத்திசாலி சேவல்!
ரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் இதமாக இருந்ததால் உற்சாகமாய் பல முறை சேவல் கூவியது. இதைக்கேட்ட நரி அங்கே வந்தது. அப்போது நரிக்கு சரியான பசியாக இருந்தது.
அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசைப்பட்டது. ஆனால், சேவல் மரத்தின் மீது இருந்ததால் அதைப் பிடிக்க முடியவில்லை. இதற்காக ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப்பார்த்து, சகோதரனே!, வணக்கம். ஒரு நல்ல செய்தியை நீ கேள்விப்பட்டாயா? பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது.
இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது. அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும். நீ கொஞ்சம் கீழே வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசுவோம் என்றது.
நரியின் தந்திரப் பேச்சை சேவல் புரிந்து கொண்டது. ஆனால், அதை வெளியே காட்டவில்லை. தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது. இதைக்கண்ட நரி, என்ன சகோதரா?, ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது.
அதற்கு சேவல், அங்கே சில வேட்டை நாய்கள் வருகிற மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா? என்பதைக் கவனிக்கிறேன் என்றது. அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது. வேகவேகமாக சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன் என்று கூறிவிட்டு கிளம்பியது.
சேவல், என் அருமை சகோதரா, போகாதே, நான் இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறினாயே!
அதற்கு நரி அந்த ஒப்பந்தத்தைப் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், அந்த நாய்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் என்ன கதி ஆவது? நான் போகிறேன் என்றது.

இதைச் சொல்லி விட்டு நரி ஒரே ஓட்டமாக காட்டுக்குள் ஓடி சென்று மறைந்தது. சேவல் யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது என்று கூறி சிரித்தது.
நீதி :
ஏமாற்றுபவர்கள் இருந்தாலும் நாம் புத்திசாலியாக செயல்பட்டால் நம்மை யாராலும் ஏமாற்ற முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக