கலக்கலான ஜோக்ஸ்...!
கணவன் : உனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா
நான் பைத்தியம் ஆயிடுவேன்.
மனைவி : இன்னொரு கல்யாணம் பண்ணிக்க
மாட்டீங்களா?
கணவன் : பைத்தியத்துக்கு என்ன? என்ன
வேணும்னாலும் செய்யும்.
மனைவி : 😠😠
-------------------------------------------------------------------------------------------------------------
பாபு : டேய், என்ன பவுடர் யூஸ் பண்ணற?
ராம் : சுனில் பவுடர்.
பாபு : என்ன செண்ட் யூஸ் பண்ணற?
ராம் : சுனில் செண்ட்.
பாபு : என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்ணற?
ராம் : சுனில் ஹேர் ஆயில்.
பாபு : ஓ, சுனில் அவ்வளவு பெரிய
பிராண்டா?
ராம் : இல்லடா, சுனில் என் ரூம்மெட்.
பாபு : 😳😳
-------------------------------------------------------------------------------------------------------------
தீபக் : ஒரு பையன் தன்னோட அப்பா பேரை
பேப்பர்ல எழுதி ஃபிரிட்ஜ்ல வெச்சான், ஏன் தெரியுமா?
மாது : தெரியலையே...!
தீபக் : அப்பா சொன்னாராம், அவர் பெயரை
கெடாம பாத்துக்கோ-ன்னு.
மாது : 😬😬
-------------------------------------------------------------------------------------------------------------
சீலா : இந்தாப்பா ராப்பிச்சை.. ரெண்டு
நாளா வீட்டுக்காரர் ஊர்ல இல்ல. ரசம்தான் வெச்சேன்.. வாங்கிட்டு போறியா..?
பிச்சைக்காரன் : சரி போடு தாயி.. போற
உசுரு எப்படி போனா என்ன..?
சீலா : 😡😡
-------------------------------------------------------------------------------------------------------------
விடுகதைகள்...!!
1. தலை மட்டும் கொண்டு ஊரெல்லாம்
சுற்றும், ஆனால் சிறகில்லை... அது என்ன?
2. சின்னச் சின்ன அறைகள் உண்டு, அது
வீடு அல்ல. சிறந்த அழகு கொண்டிருக்கும் சித்திரமும் அல்ல. காவலுக்கு ஆயிரம்
வீரர்கள் உண்டு. கோட்டையும் அல்ல... அது என்ன?
3. ஓரிடத்தில் பிறந்த சகோதரர்கள்,
தொப்பி அணிந்தவர்கள், ஒற்றுமையாக ஒரே அறையில் இருப்பவர்கள், ஒருவர் வீட்டின்
சுவரில் உரசினால், அனைவரும் எரிந்து விடுவார்கள்... அது என்ன?
விடைகள் :
1. தபால்தலை
2. தேன்கூடு
3. தீப்பெட்டி
-------------------------------------------------------------------------------------------------------------
பொன்மொழிகள்...!!
👉 விதைத்துக்கொண்டே இரு.
முளைத்தால் மரம்,
இல்லையேல் உரம்.
👉 வெற்றி என்பது உன்னை
உலகிற்கு அறிமுகம் செய்வது.
தோல்வி என்பது உன்னை உனக்கே
அறிமுகம் செய்வது.
👉 உதவத்தான் நான்
இருக்கிறேன்,
உனக்குள் நீ முயன்றாள்.
இப்படிக்கு, முயற்சி.
-------------------------------------------------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
துறந்தாரின் தூய்மை உடையர்
இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
பொருள் :
வரம்பு கடந்து நடப்பவரின் வாயில்
பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர்
ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக