பளபளக்கும் சருமத்திற்கு...!!
நம்மில் பலர் பல்வேறு விதமான காலக்கட்டத்தில் பணியாற்றி வருகிறோம். வேலைக்கு செல்லும் பலர் தங்களது அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களா என்பது சந்தேகம்தான். இயற்கையான முறையில் முகத்தின் அழகை அதிகரிப்பது எப்படி? என்பதை பற்றி காண்போம்.
தக்காளி பழத்தின் சாற்றை தேவையான அளவு எடுத்து கொண்டு, அரை தேக்கரண்டி தேனுடன் சிறிதளவு சமையல் சோடாவை சேர்த்து, நன்றாக கலந்து கழுத்தில் தடவி வந்தால் கழுத்தில் இருக்கும் கருவளையம் விரைவாக குறையும்.
நமது முகம் மற்றும் உடலை அழகூட்ட கடலை பருப்பை கால் கிலோ அளவிற்கும், பாசி பருப்பை கால் கிலோ அளவிற்கும், ஆவாரம் பூவை காய வைத்து சுமார் 100 கிராம் அளவிற்கும் எடுத்து கொண்டு, நன்றாக அரைத்து சோப்பு போட்டு குளிப்பதற்கு பதிலாக இந்த கலவையை அரைத்து தேய்த்து குளித்து வந்தால் முகம் மற்றும் நமது உடலானது அழகு பெறும்.
இன்று பெரும்பாலானோருக்கு இருக்கும் முகப்பருவின் தழும்பை மறைப்பதற்கு புதினாச்சாறு 2 தேக்கரண்டி அளவும், எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி அளவும், பயத்தம் பருப்பு மாவை சேர்த்து தழும்பு உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் முகத்தழும்பு பிரச்சனை நீங்கி முகம் பொலிவு பெறும்.
முகம் மென்மையாக மாறுவதற்கு வெள்ளரிச்சாறு, புதினாச்சாறு ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து கொண்டு, எலுமிச்சை பழச்சாற்றை அரை தேக்கரண்டி அளவிற்கு எடுத்து கொள்ள வேண்டும். பின்பு இவற்றை தேய்த்து சுமார் 15 நிமிடத்திற்கு பின்னர் கழுவினால் முகமானது மென்மையாக மாறும்.
சிறிதளவு கேரட்டை எடுத்து நன்றாக அரைத்து, சிறிதளவு தேன் கலந்து நன்றாக கலக்கி, முகத்தில் தேய்த்த பின்னர் சுமார் 20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரை கொண்டு கழுவி வந்தால் உலர்ந்த சருமமானது நன்றாக பொலிவு பெறும்.
கண்களுக்கு கீழே கருவளையம் இருப்பவர்கள் அகத்திகீரையை சிறிதளவு தேங்காய்பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் பிரச்சனைகள் இருக்காது, கருவளையமும் காணாமல் போகும்.
மேல் உதடு ஒரு நிறமாகவும், கீழ் உதடு ஒரு நிறமாகவும் இருப்பவர்கள் சீமை அகத்திக்கீரை, பச்சைப்பயிறு சேர்த்து அரைத்து தடவினால் உதடுகளின் நிறம் மாறி ஒரே மாதிரியாகிவிடும்.
தக்காளிச்சாறு, வெள்ளரிக்காய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து, வேகவைத்து ஆறியதும் சிறிதளவு தயிர் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.
பாதாம் பருப்பை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து அரைத்து வாரம் ஒரு முறை தடவி வந்தால் முகத்தில் எண்ணெய் வழியாது.
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி, முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
தினமும் வீட்டில் பாலை காய்ச்சும் பொழுது பால் கொதிக்கும் சமயத்தில் வரும் ஆவிக்கு அருகில் முகத்தை காண்பித்து, அந்த நீரை துடைக்காமல் சுமார் 30 நிமிடம் காத்திருந்து கழுவினால் முகமானது நல்ல பொலிவு பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக