Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 டிசம்பர், 2019

ஆங்கில வருட ராசிபலன்கள் 2020 : பாகம் 1.


Image result for ஆங்கில வருட ராசிபலன்கள்
சுதந்திர தன்மையுடன் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே..!!
மங்களகரமான விகாரி தமிழ் வருடத்தில், சதய நட்சத்திரத்தில் சஷ்டி திதியில் வ்யாகாதம் யோகத்தில் ஆங்கில புத்தாண்டு துவங்க இருக்கின்றது.

ராசிநாதனான செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சிப்பெற்ற நிலையில் இருப்பதால் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளையும், அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வதற்கான பொன்னான வாய்ப்புகள் உருவாகும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும்.

புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான எண்ணங்கள் ஏற்படும். மேலும் வீடு, மனைகளை சிறுமாற்றம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாரிசுகளின் மூலம் பெருமை அடைவதற்கான சூழல்கள் அமையும்.

தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்களை அதிகப்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகளுக்கு கட்சிகளில் செல்வாக்கு மேம்படும். புதிய முயற்சிகளால் அங்கீகாரமும், ஆதரவும் சாதகமாக இருக்கும். தொண்டர்களின் மத்தியில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு :

மனை தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். அரசு சார்ந்த உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். மனை வாங்குவதற்கான சூழல்கள் ஏற்படும்.

வியாபாரிகளுக்கு :


சுயதொழில் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் சாதகமாக அமையும். புதிய வாய்ப்புகள் மற்றும் ஒப்பந்தங்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகளும், அதற்கான ஆலோசனைகளும் கிடைக்கப்பெற்று முன்னேற்றம் அடைவீர்கள்.

மாணவர்களுக்கு :

கல்வி பயிலும் மாணவர்களுக்கு குருமார்களின் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் நன்முறையில் அமையும். வெளியூர் சென்று படிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு சுபச்செய்திகள் 
கிடைக்கும்.

பெண்களுக்கு :

ஆரோக்கியம் சம்பந்தமான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பார்த்த தனவரவுகளின் மூலம் மேன்மை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வும், முன்னேற்றமான வாய்ப்புகளும் காலதாமதத்திற்கு பிறகு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்களின் மூலம் புதுவிதமான அனுபவமும், வெளிவட்டாரங்களில் செல்வாக்கும் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நன்மையை அளிக்கும்.

கலைஞர்களுக்கு :

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் புதிய அறிமுகமும், அதனால் பொருள் இலாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மனதில் இருக்கும் குழப்பங்களை நீக்கி தெளிவை அளிக்கும்.

பரிகாரம் :

செவ்வாய்க்கிழமைதோறும் முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி கந்தசஷ்டி கவசம் படிக்க அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக