சமீப
ஆண்டு காலமாக செல்போன் பயனாளர்களிடம் அதிகம் கவர்ந்த செயலியாக டிக் டாக் இருந்து
வருகிறது. இந்த செயலியில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக பாட்டு பாடி நடனமாடி தங்களின்
வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனாலும் இந்த செயலியில் சில சர்ச்சைக்களும்
சில மோசடிகளும் அவ்வப்போது நடந்து வருகிறது என அனைவரும் அறிவோம்.
இந்நிலையில்,
சீனாவில் டிக் டாக் நிறுவனம் குறுகிய காலத்தில் நல்ல வரவேற்பை பெற்ற செயலியாக
உருவெடுத்துள்ளது எனவும் , குறிப்பாக இந்தியர்கள் இடையே நல்ல வரவேற்பை
பெற்றுள்ளது. இது வயது வித்தியாசமின்றி பலரும் டிக் டாக் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது
டிக்டாக் உருவாக்கிய அந்த நிறுவனம் இந்தியாவில் மற்றொரு செயலியை அறிமுகம்
செய்துள்ளது. அதற்கு ‘ரெஸ்சோ’ என்ற பெயரில் இசை பிரியர்களுக்காகவே
இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி அறிமுகப்படத்தியவுடனே இந்தியாவில்
சுமார் 27,000-திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது பீட்டா வெர்ஷனாக
உள்ள ரெஸ்சோ-வில் பலவகையான பாடல்களை சேகரித்து வைத்திருக்கும் செயலியாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக