பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஜெனரல்
(ஓய்வு) மற்றும் இராணுவத்தலைவரான பர்வேஸ் முஷாரப்புக்கு உயர் தேசத் துரோக
வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தண்டனை விதித்து
உத்தரவிட்டுள்ளது.
பர்வேஸ் முஷாரப்புக்கு எதிரான வழக்கை
சிந்து உயர்நீதிமன்றத்தின் (எஸ்.எச்.சி) பெஷாவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகர் அகமது
சேத் அக்பர் மற்றும் லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதி ஷாஹித் கரீம் ஆகியோர் அடங்கிய
சிறப்பு பெஞ்ச் விசாரித்து வந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பெஞ்ச்
அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
A special court hands death penalty to former Pakistani military dictator
Pervez Musharraf in high treason case: Pakistan Media (file pic) pic.twitter.com/8V3j7uAyZI
— ANI (@ANI) December
17, 2019
நீதிமன்றம் தனது உத்தரவில், இந்த
வழக்கில் புகார்கள், பதிவுகள், வாதங்கள் மற்றும் உண்மைகளை மூன்று மாதங்களாக
பகுப்பாய்வு செய்ததாகக் கூறியதுடன், பாகிஸ்தான் அரசியலமைப்பின் 6 வது பிரிவின்படி
முஷாரஃப் உயர் தேசத் துரோக குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் தான்
அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர். மூன்று
நீதிபகள் அடங்கிய அமர்வில் இரண்டு நீதிபதிகளில் முஷாரப்பிற்கு எதிராக
முடிவெடுத்தனர் குறிப்பிடத்தக்கது.
எட்டு ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்த
பர்வேஷ் முஷாரப்பிற்கு தேசத் துரோக வழக்கில் பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் மரண
தண்டனை விதித்துள்ளது. டிசம்பர் 3, 2007 அன்று, அவசரகாலத்தை அமல்படுத்தியதற்காக
முன்னாள் ஜனாதிபதி மீது 2013 டிசம்பரில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
முஷாரஃப் 31 மார்ச் 2014 அன்று குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதோடு, அந்த ஆண்டு
செப்டம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு முழு ஆதாரங்களையும்
அளித்தது. முஷாரஃப் 2016 மார்ச் மாதம் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார். தற்போது
துபாயில் வசித்து வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக