Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 17 டிசம்பர், 2019

மும்பை: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 22 வயது பெண்!

மும்பை: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 22 வயது பெண்!


காராஷ்டிராவில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 22 வயது பெண் உயிரிழந்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் காலை மற்றும் மாலை நேரங்களில் புறநகர் ரயில்களில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். மும்பை மற்றும் தானே பகுதியில் உள்ளவர்கள் புறநகர் ரயில்களில் தான் அலுவலகத்திற்கு செல்வார்கள்.

இந்நிலையில் நேற்று காலை மும்பையை ஒட்டிய தானே மாவட்டத்தின் டோம்பிவிலி ரயில் நிலையங்களுக்கு இடையே 22 வயது இளம் பெண் தவறி விழுந்துள்ளார். அந்த பெண் கூட்ட நெரிசலால் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்

போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பெண்ணுக்கு 22 வயதும், அவர் சிஎஸ்எம்டி- பவுண்ட் இடையே இயக்கப்பபடும் அதிவேக ரயிலில் காலை 9.30மணிக்கு ஏறி இருக்கிறார். அதிகளவில் கூட்டம் இருந்த நிலையில் அவர் தவறி விழுந்தார்,. பின்னர் அங்கிருந்த மக்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்து போனார். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!