Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 டிசம்பர், 2019

எத்தனை நாள் விடுமுறை எடுத்தாலும் சம்பளப் பிடித்தம் இல்லை: பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு

Image result for leave
 


ரு மாதத்தில் ஒரு நாள் விடுமுறை எடுத்தால் சம்பளத்தில் கைவைக்கும் நிறுவனங்களின் மத்தியில் ஒரு மாதத்தில் எத்தனை நாள் விடுமுறை எடுத்தாலும் விடுமுறை பிடித்தம் இல்லை என்ற அன்லிமிடெட் விடுமுறை அறிவிப்பு ஒன்றை நியூசிலாந்து நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது
நியூசிலாந்தில் உள்ள ராக்கெட் ஒர்க்ஸ் என்ற கேமிங் நிறுவனத்தின் சிஇஓ டீன் ஹால் அவர்கள் இது குறித்து கூறிய போது ’எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் 30 திறமையான பணியாளர்களை நம்பித்தான் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒரு ப்ராஜக்ட்டிற்காக முதலீடு செய்கிறோம். அப்படி என்றால் அவ்வளவு பெரிய பொறுப்பை சுமக்கும் பணியாளர்களுக்கு நாங்கள் பல்வேறு சலுகைகள் தர வேண்டும் என்பது எங்கள் கடமையாக உள்ளது
தங்களது நேரத்தை வீணடிக்காமல் இரவு பகலாக உழைத்து வரும் அந்த ஊழியர்களுக்காக இந்த புதிய நடைமுறையை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். இதன்படி திறமையான ஊழியர்கள் எத்தனை நாள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் எடுக்கும் விடுமுறைக்கு சம்பளம் எதுவும் பிடித்தம் கிடையாது
அதேபோல் அதிக விடுமுறை எடுப்பதால் ஒரு பணியாளரின் திறமை எப்போதும் குறையாது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. பல்வேறு ஊழியர்கள் குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை கூட யோசிக்காமல் மணிக்கணக்கில் நிறுவனத்திற்காக வேலை செய்யும் அவர்களுக்காக நாங்கள் இந்த சலுகையை தருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக