Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 டிசம்பர், 2019

இனி 3 நாளில் நாம் நினைத்த மொபைல் நெட்ஒர்க் மாறலாம்! ட்ராய் அதிரடி அறிவிப்பு!

இனி 3 நாளில் நாம் நினைத்த மொபைல் நெட்ஒர்க் மாறலாம்! ட்ராய் அதிரடி அறிவிப்பு!


நாம் பயன்படுத்தும் மொபைல் நெட்ஒர்க்கிலிருந்து இன்னொரு நெட்ஒர்க் மாறுவதற்கு முன்னர் 5 நாட்களுக்கு மேலாக காலதாமதமாகும். தற்போது இந்த காலதாமதத்தை  தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் துறையான ட்ராய் ( TRAI ) குறைத்துள்ளது.

இந்த காலதாமதத்தை தற்போது ட்ராய் 3 வேலைநாட்களாக குறைத்துள்ளது. இனி நாம் நினைத்த நெட்ஒர்க் மாறுவதற்கு 3 நாட்கள் போதும். நெட்ஒர்க் மாறுவதற்கு தகுந்த காரணமின்றி விருப்பம் நிராகரிக்கப்பட்டால் அந்த குறிப்பிட்ட நெட்ஒர்க்கிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெட்ஒர்க் மாற்றத்துக்காக தங்களது மொபைல் போனில் இருந்து 1900 என்கிற என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவேண்டும். அங்கிருந்து வரும் யு.பி.எஸ் கோடு எண் கிடைக்கும் அதனை கொண்டு விரும்பிய நெட்ஒர்க்கிற்கு 3 நாளில் மாறிவிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக