Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 16 டிசம்பர், 2019

இந்திய பொருட்களை இறக்குமதி செய்ய, தடை நீக்கியது வங்கதேசம்!

 இந்திய பொருட்களை இறக்குமதி செய்ய, தடை நீக்கியது வங்கதேசம்! 

ந்தியாவின் நட்பு நாடான வங்கதேசம், திரிபுராவின் இரண்டு துறைமுகங்கள் வழியாக இந்தியாவில் இருந்து ஒன்பது பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்கியுள்ளது. 

வங்கதேசத்தின் இந்த நடவடிக்கை அப்பகுதியின் வர்த்தகர்களுக்கு பயனளிக்கும் என்று கூறப்படுகிறது. திரிபுராவின் ஒன்பது நிலப்பரப்பு துறைமுகங்களிலிருந்து 2018-19-ஆம் ஆண்டில் வங்கதேசம் ரூ.2222.42 கோடி மதிப்புள்ள பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது, இறக்குமதி மதிப்பீடு ரூ.146.66 கோடியாக இருந்தது. எனினும் இதிலிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய தடை உள்ளது.

இந்நிலையில் தற்போது குறித்த ஒன்பது பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை வங்கதேசம் நீக்கியுள்ளது. இதுகுறித்து வெயிடப்பட்டுள்ள அறிக்கையில் வங்கதேசம் குறிப்பிடுகையில்., அக்வுடா மற்றும் ஸ்ரீமந்த்பூர் நிலப்பரப்பு துறைமுகங்களில் இருந்து ஒன்பது பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை வங்கதேசம் இப்போது நீக்கியுள்ளது. டிசம்பர் 1 முதல் இறக்குமதி தடை நீக்கப்பட்ட பொருட்கள் (முந்திரி, காகிதம், சர்க்கரை, ஜெனரேட்டர்கள், உடைந்த கண்ணாடி, சாக்லேட், குழந்தை துடைப்பான்கள், இனிப்புகள் மற்றும் வைட்டமின்கள்) இறக்குமதி செய்வதற்கான தடை நீக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளது.

உங்கள் தகவலுக்கு, மாநில அரசின் முன்முயற்சியின் பேரில், அண்டை நாடு இதுவரை 16 பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை இரண்டு கட்டங்களாக நீக்கியுள்ளது. இதனிடையே தேயிலை இறக்குமதி மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது, எனினும் வங்கதேசம் இதுவரை இந்த கோரிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் வங்கதேசன் தேயிலை இறக்குமதிக்கான தடையை நீக்கும் பட்சத்தில் திரிபுரா மக்கள் பெருமளவில் பயனடைவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக