திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் நகருக்கு அருகே தண்டல்கழனியில் உள்ள மரகுடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 8 குடோன்கள் உள்ளன. அதில் தற்போது வரை 3 குடோனில் உள்ள அட்டைப்பெட்டிகள் மற்றும் மரச்சாமான்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தை கட்டுக்குள் கொண்டு வர சுற்றுவட்டாரத்தில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 7 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. தீ அடுத்தடுத்த குடோன்களில் பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக