பிறந்த எண்களிலுள்ள சில ரகசியம் (3, 12, 21, 30) ல் பிறந்தவர்களின் ரகசியம்
ஒருவரின் ராசி, நட்சத்திரத்தை வைத்து அவர்களது குணத்தை கூற முடியும். பிறந்த தேதியினை வைத்து அவர்களது குண அமைப்பு, அதிர்ஷ்ட கல், பரிகாரம் அனைத்தையும் தெரிந்துக் கொள்ள முடியும். மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குரியவர்கள். 3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்கள் 3-ம் எண்ணுக்குரியவர்கள் ஆவார்கள்.
குண அமைப்பு :
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளையும் பெற்றிருப்பார்கள். நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் அமைந்திருக்கும். தாம் கற்றதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள்.
சுயநலம் பாராமல் உதவி செய்யக்கூடிய குணமிருப்பதால், இவர்களிடம் எதையும் எளிதில் சாதித்துக் கொள்ளலாம். உண்மையே பேசி நீதி நியாயத்தை வாழ்வில் கடைபிடிப்பார்கள்.
முன் கோபக்காரர்கள். ஆனாலும் கோபம் தணிந்து பின் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கள்ளம் கபடமின்றி உள்ளன்புடன் அனைவரிடமும் மனம் திறந்து பேசுவார்கள். தெய்வீகப் பணிகளில் அதிக ஈடுபாடுடையவர்கள்.
அதிர்ஷ்ட கல் :
3ஆம் எண்ணுக்குரியவர்கள் அதிர்ஷ்ட கல்லாக புஷ்பராக கல் பதித்த மோதிரம் அணிந்து கொள்வதால் எல்லாவகையிலும் மேன்மைகளையும், வெற்றிகளையும் அடையலாம்.
பரிகாரங்கள் :
3ஆம் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, வழிப்படுவது நன்மையை அளிக்கும்.
அதிர்ஷ்டம் தருபவை :
அதிர்ஷ்ட தேதி, - 3, 12, 21, 30.
அதிர்ஷ்ட நிறம் - பொன் நிறம்.
அதிர்ஷ்ட திசை - வடக்கு.
அதிர்ஷ்ட கிழமை - வியாழன்.
அதிர்ஷ்ட கல் - புஷ்பராகம்.
அதிர்ஷ்ட தெய்வம் - தட்சிணாமூர்த்தி.
குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தங்களின் எண்ணுக்குரிய ரகசியத்தை தெரிந்துக் கொண்டு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்து வந்தால் வாழ்வில் அனைத்தும் வெற்றியாகவே அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக