இந்தியாவில் 100க்கு 70சதவீத ரயில் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்கப்படுகின்றன. இதன், அடிப்படையில், மாதத்தில் ரூ.50,000 வரை சம்பாதிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஆசியாவில் மிகப்பெரிய ரயில்வே நிர்வாகமென்றால் அது
இந்திய ரயில்வே துறை என்றே சொல்ல வேண்டும். தினசரி குறைந்தது 15 லட்சமாவது மக்கள் அதில்
பயணிக்கின்றனர். ரயில்வே துறையில் ஒரு அங்கமாக செயல்படுகிறது ஐ.ஆர்.சி.டி.சி
. அதாவது, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன். டிக்கெட்
முன்பதிவு இதன் முக்கிய வேளையாக இருக்கின்றது.
இந்த ஐ.ஆர்.சி.டி.சியால் அங்கிகரிக்கப்பட்ட
டிக்கெட் முன்பதிவு முகவராக மாறுவதன் மூலம் நீங்கள் மாதத்திற்கு ரூ .50,000 வரை சம்பாதிக்கலாம்
என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா?
இந்தியா ரயில்வே பயணத்தில் கன்பார்ம் டிக்கெட்,
தட்கல், வெய்டிங் லிஸ்ட், ஆர்ஏசி போன்ற அனைத்து வகையான டிக்கெட்டுகள் உள்ளன. டிக்கெட்
முன்பதிவு முகவராக மாறினால் நீங்கள் இந்த வகையான அனைத்து டிக்கெட்டுகளையும் பயனர்களுக்கு
முன்பதிவு செய்து கொடுக்கலாம்.
நான் ஏ.சி (ஸ்லீப்பர்,2S) க்ளாஸ் டிக்கெட்டை புக்
செய்து கொடுத்தால், ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 கமிஷன் கிடைக்கின்றது.
ஏ.சி கிளாஸ் ( 1A, 2A, 3A, CC) டிக்கெட்டை
பயனர்களுக்கு டிக்கெட்டை புக் செய்து கொடுத்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.
40 வரை கமிஷன் கிடைக்கின்றது.
தற்காலிக இந்தியாவில் 100க்கு 70சதவீத ரயில் டிக்கெட்டுகள்
ஆன்லைன் மூலமே விற்கப்படுகின்றன. இந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் மட்டும் பார்த்தல்,
மாதத்தில் ரூ.50,000 வரை சம்பாதிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு முகர்வர்களுக்கு
ஐ.ஆர்.சி.டி.சி தரப்பில் இருந்து அனைத்து வகையானக உதவிகளும் கிடைக்கின்றன. முன்பதிவு
முகவர்களையும், ஐஆர்சிடிசி மையத்தை இணைக்கும் வகையும் 24 மணி நேர இணைய போர்டல் இயக்கப்படுகின்றன.
How to become an IRCTC
Agent : ஐஆர்சிடிசி டிக்கெட் புக்கிங் ஏஜெண்ட்!
1. முதலில் ஐஆர்சிடிசி ஏஜெண்டாக மாற அதற்கான உரிமத்தை
பெற வேண்டும்.
2. இதற்கு நீங்கள் ஐஆர்சிடிசிக்கு ஒரு முறை கட்டணமாக
20,000 ரூபாயை செலுத்த வேண்டும். அதில் 5,000 ரூபாய் திருப்பி அளிக்கக் கூடிய டெபாசிட்டாக
இருக்கும். இந்த சேவையைத் தொடர்ந்து வழங்க ஆண்டுக்கு 5,000 ரூபாயை கட்டணமாக ஐஆர்சிடிசிக்கு
செலுத்த வேண்டும்.
3. நடைமுறைகள்:
100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் மூலம் இதற்கான ஒப்பந்தம்
போடப்படும். பின்னர், டிமாண்ட் டிராஃப்ட் மூலம் 20,000 ரூபாய் ஒரு முறை பதிவு கட்டணம்
செலுத்திவிட்டால் போதும் நீங்கள் ஏஜெண்டாகிவிடலாம்.
4. தேவையான ஆவணங்கள்.
பான் கார்டு, வருமான வரி தாக்கல் விவரங்கள், முகவரி
சான்றிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக