இந்திய- சீன எல்லை பிரச்சினை குறித்து தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சு வார்த்தை நடத்த சீன வெளியுறவுத்துறை
அமைச்சர் வாங்-யீ, வரும் 21-ம் தேதி டெல்லி வருகிறார்.
பின்னர் 22-ம் தேதி தலைநகரில் நடைபெற
உள்ள பேச்சுவார்த்தையை ஆக்ராவுக்கு மாற்ற மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கு
முன் சீன அதிபர் சீ ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில்
பேச்சு நடத்தியதைப் போல் இந்த பேச்சுவார்த்தையை தாஜ்மகால் அருகே நடத்தலாம் என்று
கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த காலங்களில் எல்லைப்
பிரச்சினை தொடர்பாக இந்தியாவும் சீனாவும் நடத்திய பேச்சுவார்த்தைகளால் பெரிய பலன்
ஏதும் நடைபெறவில்லை. இதனிடையே பாகிஸ்தானுடன் சீனா கொண்ட நட்பால் இந்திய, சீனா
உறவில் சிக்கல் நீடிக்கிறது என குறிப்பிடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக