Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 16 டிசம்பர், 2019

லேடி பக்கை அடிமையாக்கும் குளவி

45751

மக்குத் தெரியாத எவ்வளோ இரகசியங்களை உள்ளடக்கியது பூமி. அதில் ஒன்றுதான் லேடி பக்கை அடிமைப் படுத்தும் குளவி பற்றிய தகவல்.
டினோகேம்பஸ் கோஸினெல்லா[ Dinocampus coccinellae ]என்ற அறிவியல் நாமகரணம் கொண்ட குளவி லேடி பக்கை ஜோம்பீஸ் ஆக மாற்றுவது வியப்பானதுதான்.

ஏன் இந்த லேடி பக் குகள் குளவியின் கூட்டை பாது காக்க வேண்டும் என்பது தான். சமீபத்தில் பிரெஞ்ச் -கனேடியன் குழு ஒன்று இதற்கான காரணத்தை கண்டுபிடித்திருக்கின்றன.

இந்த குளவியானது லேடிபக்கை ஒரு வித வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்குகிறது அதன் காரணமாக அவைகளின் நரம்பு மண்டலமும் மூளையும் பாதிப்புக்கு உள்ளாகிறது. பின் அது குளவியின் கட்டளைகளை ஏற்கிறது. சொல்லப் போனால குளவியின் கூட்டுக்கு பாதுகாவலனாக மாறிவிடுகிறது.

குளவி லேடி பக் கின் உடலின் வைரஸ்தாக்கிய முட்டைகளை உட் செலுத்துவிடுகிறது(by using ovipositor ). முட்டையில் இருந்து பொறித்த லார்வாக்கள் அதன் உடலில் இருந்து வெளியேறி கூட்டை(cocoon) அமைக்கிறது. முட்டை பொறிந்த போதே பக் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த கூடு பக்கின் உடலை ஒட்டிய படியே கால்களுக்கு இடையில் பாதுகாப்பாக இருக்கும். லார்வா முழுவளர்ச்சி அடைந்து கூட்டை விட்டு வெளியேறும் வரை பக்கின் தலையாய பணி கூட்டை பாது காப்பது தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக