Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 டிசம்பர், 2019

இனி மாதுளைய சாப்பிட்டுட்டு தோலை தூக்கி வீசிடாதீங்க... எத்தனை நோயை சரிபண்ணுது பாருங்க...

 Image result for மாதுளை பழத் தோல்
ழங்களிலேயே மிக அதிக ஊட்டச்சத்துக்களும் நிறைய வைட்டமின்களும் நிறைந்த பழங்களில் ஒன்று என்றால் அது மாதுளையைச் சொல்லலாம். அந்த ஊட்டச்சத்துக்கள் அந்த பழங்களில் மட்டுமல்ல. அதனுடைய தோலில் இருக்கிறது. அதனால் இனிமேல் அந்த தோலை கீழே தூக்கி வீசிவிடாதீர்கள். அதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பாருங்கள்.
மாதுளை பழத் தோல்
மாதுளம் பழத்தை வெட்டி சாப்பிட்டதும் தோலை தூக்கி எறிந்து விடுவீர்களா?
நீங்கள் அதை ஏன் பத்திரப்படுத்தி எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என்பதற்கான காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
மாதுளம் பழம் அதன் அற்புதமான சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது. நம்மில் பெரும்பாலானோர் மாதுளம்பழத்தின் சிகப்பான புளிப்பான சிறிய விதைகள் அல்லது பழங்களை சாப்பிடுவோம். பெரும்பாலும் அதன் கடினமான சிகப்பு தோலை தூக்கி எறிகிறோம்.
உண்மையில் மாதுளம்பழத்தை போலவே அதன் தோலிலும் ஏராளமான நன்மைகள் அடங்கி இருக்கிறது. உங்களுக்கு தெரிந்திராத மாதுளம் பழத்தோலின் சில நன்மைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். மாதுளம் பழத்தோல் உங்கள் அழகை மேம்படுத்த எப்படி உதவுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
சருமப் பிரச்சினைகள்
மாதுளம் பழத்தோல் சருமத்தின் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த மாதுளம் பழத்தோல் உங்கள் அழகு மற்றும் முடி பராமரிப்பு சிகிச்சையை எப்படி ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்ல உதவுகிறது என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
இது முகத்தில் கட்டிகள் முகப்பருக்கள் மற்றும் சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக போராடுகிறது
மாதுளம் பழத்தில் அடங்கியிருக்கும் மருத்துவ குணங்களால் இது முகத்தில் ஏற்படும் கட்டிகள் முகப்பருக்கள் மற்றும் சிராய்ப்புகளுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. மாதுளம் பழத்தோலில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அடங்கியிருப்பதால் பாக்டீரியாக்களையும் நோய் தொற்றுகளையும் தடுக்க உதவுகிறது.
இதை எப்படி பயன்படுத்த வேண்டும்?
ஒரு கைப்பிடி அளவு வெயிலில் காயவைத்த மாதுளம் பழத்தோலை எடுத்துக்கொண்டு ஒரு தவாவில் அல்லது அடி கனமான பாத்திரத்தில் நன்கு வறுத்துக் கொள்ளவும். நன்றாக ஆற விட்டு பிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இந்த பொடியுடன் எலுமிச்சம்பழ ஜூஸ் மற்றும் பன்னீர் சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளவும். பிறகு இதை உங்கள் முகம் முழுவதும் குறிப்பாக முகப்பருக்கள் கட்டிகள் உள்ள இடங்களில் சீராக தடவிக் கொள்ளவும். முகம் நன்றாக காய்ந்த பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை முழுவதுமாக கழுவிவிடவும்.
ஆன்டி - ஏஜிங்
இது சருமத்தில் சுருக்கங்களையும் வயதான தோற்றத்தையும் தடுக்கிறது. மாதுளம் பழத்தோல் சருமத்தில் கொலாஜின் குறைவதைத் தடுத்து மாறாக செல்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. மாதுளம் பழத்தோலில் உள்ள ஆற்றல்மிக்க மூலக்கூறுகள் முகச் சுருக்கங்களை திறம்பட தடுத்து வயதான தோற்றத்தை தாமதப்படுத்துகிறது.
இதை எப்படி பயன்படுத்த வேண்டும்
இரண்டு டேபிள்ஸ்பூன் வெயிலில் காய வைத்து பொடியாக்கிய மாதுளம் பழத்தோலின் பொடியுடன் சிறிது பாலை சேர்த்து கலந்து கொள்ளவும். உங்களுக்கு எண்ணெய் பசை உள்ள சருமமாக இருந்தால் பாலுக்கு பதிலாக பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவி காயும் வரை அப்படியே விட்டுவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரினால் கழுவி விடவும். சிறந்த பலன்களைப் பெற இந்த பவுடரை வாரத்தில் இரு முறையாவது பயன்படுத்துங்கள்.
இயற்கையான மாய்ஸ்சுரைசராக
மாதுளம் பழத்தோல் உங்கள் சருமத்திற்கு சிறந்தது. இது சுற்றுச்சூழலில் உள்ள மாசுக்கள் மற்றும் நச்சுக்களில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்து ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. இது சருமத்தின் பிஹெச் சமநிலையை மீட்டெடுக்கிறது. மாதுளம் பழத்தில் உள்ள எலாஜிக் அமிலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. மேலும் சருமத்தை மென்மையாக மிருதுவாக பராமரிக்கிறது.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
வெயிலில் காய வைத்த மாதுளம் பழத்தோலை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். போதுமான அளவு பவுடரைக் தயார் செய்து வைத்துக்கொண்டு ஒரு சுத்தமான ஏர் டைட் பாக்ஸில் போட்டு மூடி வைத்து ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். ஒரு ஸ்பூன் நிறைய மாதுளம் பழத்தோல் பொடியை எடுத்துக் கொண்டு அத்துடன் தயிரை சேர்த்து கலக்கி ஒரு பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்திலும் கழுத்திலும் நன்றாகத் தடவி 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு குளிர்ந்த தண்ணீரால் கழுவவும்.
ஃபேசியல் ஸ்க்ரப்பாக
மாதுளம் பழத்தோலை ஸ்க்ரப் வடிவத்தில் பயன்படுத்தும்போது இறந்த செல்களையும், கரும்புள்ளி மற்றும் வெண் புள்ளிகளையும் உங்கள் முகத்திலிருந்து நீக்க உதவுகிறது.
இதை எப்படிப் பயன்படுத்துவது
இரண்டு ஸ்பூன் வெயிலில் காய வைத்து அரைத்த மாதுளம் பழ தோல் பொடி அத்துடன் ஒரு ஸ்பூன் பழுப்பு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். இதை பேஸ்ட் போல தயாரிப்பதற்கு ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் அவகோடா எண்ணெய் அல்லது உங்களுக்குப் பிடித்தமான ஏதேனும் ஒரு நறுமண எண்ணெயை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். அடுத்தபடியாக, வீட்டிலேயே தயாரித்த இந்த ஸ்கரப்பை கொண்டு உங்கள் முகம் முழுவதும் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து தண்ணீரில் கழுவினால் மென்மையான மிருதுவான சருமத்தை உணர்வீர்கள். இருந்தாலும் ஸ்க்ரப்பிங் செய்த பிறகு டோனர் மற்றும் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த மறக்காதீர்கள்.
இயற்கையான சன் ஸ்கிரீனாக
மாதுளம் பழத் தோலில் இயற்கையாகவே வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் மூலக்கூறுகள் இருக்கிறது.
தீங்கு விளைவிக்கும் யுவிஏ மற்றும் யூவிபி கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாப்பதோடு நீண்டகாலத்திற்கு கேன்சர் வராமல் தடுக்கிறது. வெயிலினால் ஏற்படும் கருமையிலிருந்து இயற்கையாக நிவாரணம் பெற இங்கே சில வீட்டுக் குறிப்புகள் தரப்பட்டிருக்கின்றன.
இதைப் பயன்படுத்துவது எப்படி
வெயிலில் காய வைத்த மாதுளம் பழத்தோலை அரைத்து பவுடர் ஆக்கி ஒரு ஏர் டைட் கன்டெய்னரில் பத்திரப்படுத்தி வையுங்கள். இந்தப் பவுடரை உங்கள் லோஷன் அல்லது கிரீம் உடன் கலந்து வீட்டிலிருந்து வெளியே கிளம்புவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக தடவிக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு இயற்கையான சன் ஸ்கிரீனை பயன்படுத்த விரும்பினால் இந்த மாதுளம் பழத்தோல் பவுடரை நறுமண எண்ணெயுடன் கலந்து உங்கள் முகத்தில் பூசிக்கொள்ளலாம்.
முடி உதிர்வதைத் தடுத்து பொடுகை போக்க
மாதுளம் பழத்தோல் கூந்தல் உதிர்வதற்கு எதிராகப் போராடவும் பொடுகுத் தொல்லையை தடுக்கவும் உதவும்.
இதை எப்படிப் பயன்படுத்துவது
உலர்ந்த மாதுளம் பழத்தோல் பொடியை உங்கள் ஹேர் ஆயிலுடன் கலக்கவும். இதை மயிர் கால்களில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்யவும். இதை தடவிய 2 மணி நேரத்திற்குப் பிறகு ஒரு மைல்டு ஷாம்பு போட்டு உங்கள் தலையை அலசி விடலாம் அல்லது உங்களது வசதிக்கு ஏற்றபடி இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து பிறகு மறுநாள் காலை அலசலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக