உலகம் முழுவதும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கும் இடமாக
இருப்பது சிறைசாலைதான். அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு ஏற்ப அவர்கள் செய்த தண்டனைகளை
பொறுத்து அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கபடுகிறது. பொதுவாக சிறைச்சாலை என்பது
ஒருவர் செய்த தவறை உணர்ந்து திருந்தி வாழ வாய்ப்பை வழங்கும் இடம் என்று
கூறுவார்கள். ஆனால் சிறைச்சாலைகள் அப்படி இருக்கிறதா என்றால் இல்லை என்பதே
அனைவரின் பதிலாக இருக்கும்.
இந்தியாவை பொறுத்தவரை எவ்வளவு பெரிய
குற்றங்கள் செய்திருந்தாலும் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தால் தண்டனையில் இருந்து
தப்பித்துக் கொள்ளலாம் அதையும் மீறி தண்டனை கிடைத்தாலும் அவர்களின் செல்வாக்கு
காரணமாக சிறையிலும் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கிறது. ஆனால் எந்தவித
செல்வாக்கும் செல்லாத சில சிறைச்சாலைகள் உலகில் இருக்கிறது. இங்கு கைதிகளுக்கு
இருக்கும் கட்டுப்பாடுகளும், வழங்கப்படும் தண்டனைகளும் மிகவும் கடுமையானதாக
இருக்கும். இந்த பதிவில் உலகின் அதிபயங்கரமான சிறைச்சாலைகள் என்னென்னெ என்று
பார்க்கலாம்.
பிளாக் டால்பின் சிறைச்சாலை, ரஷ்யா
ரஷ்யாவில் உள்ள இந்த சிறைச்சாலையில்
மிக மோசமான கொலைகாரர்கள், கற்பழிப்புக் குற்றவாளிகள் மற்றும் நரமாமிசம்
சாப்பிடுபவர்கள் போன்றோர் அடைக்கப்படுகின்றனர். இந்த சிறையில் கைதிகள் பகலில்
உட்காரவோ, ஓய்வெடுக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. இங்கிருக்கும் குற்றவாளிகளின்
இயல்புக்கு ஏற்ப இங்கிருக்கும் வார்டன்களும் மிருகத்தனமாவர்களாக இருப்பார்கள்.
தூங்கும் நேரம் தவிர இங்கிருக்கும் கைதிகள் அனைவரும் வேலை செய்து கொண்டே இருக்க
வேண்டும். பெரும்பாலும் இங்கிருக்கும் கைதிகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மனஅழுத்தம்
நிறைந்த சூழ்நிலையிலேயே வைத்திருக்கப் படுகிறார்கள்.
பெனால்ட் டி சியுடாட் பேரியோஸ்
உலகின் மிகவும் ஆபத்தான வன்முறை
கும்பலான MS 13 இந்த சிறையில்தான் உள்ளது, மேலும் இவர்கள் அளவிற்கு ஆபத்தான பேரியோ
18 கும்பலும் இங்குதான் அடைக்கப்பட்டுள்ளது. இந்த சிறைக்குள் காவலர்கள் நுழையவே
அஞ்சுவார்கள். பச்சைக் குத்திய இந்த இரண்டு கும்பல்களுக்கு இடையில் அடிக்கடி
வன்முறைகள் ஏற்படும். இவர்களின் வன்முறையில் பல ஆயுதமேந்திய காவலர்களும்
கொல்லப்பட்டுள்ளனர்.
பெட்டக் தீவு சிறை, ரஷ்யா
உலகின் மிகவும் ஆபத்தான வன்முறை
கும்பலான MS 13 இந்த சிறையில்தான் உள்ளது, மேலும் இவர்கள் அளவிற்கு ஆபத்தான பேரியோ
18 கும்பலும் இங்குதான் அடைக்கப்பட்டுள்ளது. இந்த சிறைக்குள் காவலர்கள் நுழையவே
அஞ்சுவார்கள். பச்சைக் குத்திய இந்த இரண்டு கும்பல்களுக்கு இடையில் அடிக்கடி
வன்முறைகள் ஏற்படும். இவர்களின் வன்முறையில் பல ஆயுதமேந்திய காவலர்களும்
கொல்லப்பட்டுள்ளனர்.
டாட்மோர் சிறை, சிரியா
டாட்மோர் உலகின் மிக மோசமான
சிறைச்சாலைகளில் ஒன்றாகும். இந்த சிறைச்சாலையின் சுவர்களுக்குள் துஷ்பிரயோகம்,
சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற சிகிச்சை ஆகியவை மிகவும் சாதாரணமாக நடக்கும்.
இந்த சிறையில் இருந்து வெளியே செல்பவர்கள் வாழ்நாள் முழுவதும் இங்கு அனுபவித்த
சித்திரவதைகளை மறக்க முடியாது. கைதிகளை தரையில் இழுத்து செல்வது, கோடரியால் துண்டு
துண்டுகளாக வெட்டுவது போன்ற சித்திரவதைகள் இங்கு செய்யப்படும். ஜூன் 27, 1980
அன்று இந்த சிறையில் ஒரே நாளில் 1000 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
காமிட்டி சிறை, கென்யா
இந்த சிறையில் இருக்கும் அதிகபட்ச
நெரிசல், வெப்பமான சூழ்நிலை, தண்ணீர் பற்றாக்குறை மட்டுமின்றி இங்கு நடக்கும்
வன்முறைகளுக்காகவும் இந்த சிறை மிகவும் புகழ்பெற்றதாகும். கைதிகளுக்கு இடையேயான
சண்டைகள் மற்றும் வார்டன்களின் கடுமையான தாக்குதல்கள் என இங்கு ஆண்டுக்கு பல
கைதிகளின் உயிர்கள் பறிபோகிறது. கற்பழிப்பு குற்றங்களும் இந்த சிறையில் அதிகம்
அரங்கேறுகிறது.
லா சபனேட்டா சிறை, வெனிசுலா
இந்த சிறை குறைவான ஊழியர்களையும்,
அளவிற்க்கு அதிகமான கைதிகளையும் கொண்டது, இது மிகவும் ஆபத்தான காம்பினேஷன் ஆகும்.
இந்த சிறையில் வன்முறை மற்றும் கற்பழிப்பு என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாகும்.
1995-ல் ஒரே நாளில் 200 கைதிகள் இந்த சிறையில் கொல்லப்பட்டனர். இங்கிருக்கும்
கைதிகள் அனைவரிடமும் கத்தி இருக்கும். இந்த சிறையில் மறுவாழ்வு என்பதைக்
காட்டிலும் உயிர்வாழ்வது என்பதே மிகவும் கடினமான ஒன்றாகும்.
யூனிட் 1391, இஸ்ரேல்
மிகவும் இரகசியமான இந்த தடுப்பு மையம்
'இஸ்ரேலிய குவாண்டனாமோ' என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறையில் கொந்தளிப்பான
அரசியல் கைதிகள் மற்றும் அரசின் பிற எதிரிகள் அடைத்து வைக்கப்படுகிறார்கள். இங்கு
இவர்களுக்கு நடத்தப்படும் கொடுமைகளை கூற இயலாது. இந்த சிறைச்சாலை பெரும்பாலும்
ரேடாரால் பாதுகாப்படுகிறது. நவீன வரைபடங்களில் இருந்து இந்த இடம்
அகற்றப்பட்டுள்ளதால் உலக நாடுகளில் பலருக்கும் இந்த இடத்தைப் பற்றி தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. சித்திரவதை மற்றும் மனித உரிமை மீறல் இங்கே சாதாரணமானது.
கிடாரமா மத்திய சிறை, ருவாண்டா
600 பேர் இருக்க வேண்டிய இந்த
சிறைச்சாலையில் 6000 பேர் இருக்கின்றனர். பூமியின் நரகமாக கருதப்படும் இந்த
சிறைச்சாலையில் மனிதர்கள் கால்நடைகள் போலவே நடத்தப்படுகின்றனர். இங்குள்ள
ஆபத்துகளும், நோய்களும் சாதாரண மனிதர்களால் கற்பனை செய்யக்கூட முடியாதவை ஆகும்.
ADX புளோரன்ஸ், அமெரிக்கா
சூப்பர்மேக்ஸ் சிறை என்று
அழைக்கப்படும் இது மிகவும் ஆபத்தான கைதிகளை அடைத்து வைக்க பயன்படுகிறது. இது தீவிர
கண்காணிப்பும், கடினமான கட்டுப்பாடுகளும் இருக்கும் சிறையாகும். கைதிகள் ஒரு
நாளைக்கு 23 மணிநேரம் தனிமைச் சிறையில் இருக்க வேண்டும் மற்றும் கட்டாய உணவு
மற்றும் தற்கொலை சம்பவங்கள் மிகவும் அதிகம். இந்த வகையான சிகிச்சையானது
கைதிகளுக்கு கடுமையான உளவியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
பேங் குவாங் சிறை, பாங்காக்
நாட்டின் புனித்தன்மைக்கு ஆபத்தாக
கருதப்படும் கைதிகள் இந்த சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்த சிறையில்
அடைக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு கிண்ணம் அரிசி சூப் மட்டுமே
வழங்கப்படுகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு கணுக்காலை சுற்றி இரும்பு
குண்டுகள் கட்டப்பட்டிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக