சரள யோகம் :
எட்டாம் அதிபதி எட்டில் பலம் பெற்று இருப்பதால் உண்டாவது சரள யோகம் ஆகும்.
சரள யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
நீண்ட ஆயுள் உடையவர்கள்.
எதற்கும் பயம் இல்லாதவர்கள்.
தன்னம்பிக்கை உடையவர்கள்.
சிறந்த கல்விமான்.
எதிரிகளை வெல்லும் திறமைசாலிகள்.
அசுர யோகம் :
லக்னத்தில் குருவும், மதியும் கூடி இருந்து லக்னாதிபதி சுபருடன் இணைந்து இருக்க உண்டாவது அசுர யோகம் ஆகும்.
அசுர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
பொதுச்சேவையில் ஈடுபட்டு கீர்த்தி உண்டாகும்.
தலைமை பதவிக்கான வாய்ப்புகள் கிட்டும்.
இந்த யோகம் 40 வயதுக்கு மேல் உண்டாகும்.
பாதாள யோகம் :
லக்னத்திற்கு பனிரெண்டில் சுக்கிரன் இருந்து பனிரெண்டாம் வீட்டுக்கு உரியவர் உச்சம் பெற்று குருவுடன் இணைந்திருப்பதால் உருவாவது பாதாள யோகம் ஆகும்.
பாதாள யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.
சிறப்பு பெற்று விளங்குவார்கள்.
கவுரி யோகம் :
மனோகாரகனான மதி உச்சம் பெற்று குருவால் பார்க்கப்பட்டால் உருவாவது கவுரி யோகம் ஆகும்.
கவுரி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
இறை வழிபாட்டில் அதிக ஈடுபாடு இருக்கும்.
நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்.
இந்திர யோகம் :
லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டில் சந்திரன் அமையப்பெற்று ஐந்தாம் மற்றும் பதினொன்றாம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் உண்டாவது இந்திரயோகம் ஆகும்.
இந்திர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
தைரியமானவர்கள்.
கீர்த்தி மிகுந்த வாழ்க்கை வாழ்வார்கள்.
பிரபை யோகம் :
லாபாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்து கேந்திர வீடுகளில் இருக்க உண்டாவது பிரபை யோகம் ஆகும்.
பிரபை யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
யோகம் உடையவர்கள்.
பொதுச் சேவையில் ஈடுபாடு இருக்கும்.
கீர்த்தி உடையவர்கள்.
அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள்.
காஹள யோகம் :
நான்காம் வீட்டு அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்து லக்னாதிபதி பலமடைந்து இருப்பதால் உண்டாவது காஹள யோகம் ஆகும்.
காஹள யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
பிடிவாத குணம் உடையவர்களாக இருப்பார்கள்.
தைரியமானவர்கள்.
மகாலட்சுமி யோகம் :
ஒன்பதாம் அதிபதியும், சுக்கிரனும் கேந்திர மற்றும் திரிகோண வீடுகளில் அமர்வது மகாலட்சுமி யோகம் ஆகும்.
மகாலட்சுமி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
வாழ்க்கை துணைவி மூலம் லாபம் உண்டாகும்.
தலைமை பதவி உண்டாகும்.
வாகன வசதிகள் ஏற்படும்.
சதா சஞ்சார யோகம் :
லக்னாதிபதி சரராசியில் இருந்தால் சதா சஞ்சார யோகம் உண்டாகும்.
சதா சஞ்சார யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
அதிக அலைச்சல் மிகுந்த தொழில் அமையும்.
பாக்கிய யோகம் :
லக்னத்திற்கு பத்தாம் வீட்டில் சுப கிரகம் இருப்பது அல்லது பத்தாம் அதிபதியான பாக்கியாதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று சுபகிரக பார்வை பெறுவதால் உண்டாவது பாக்கிய யோகமாகும்.
பாக்கிய யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
புத்திக்கூர்மை உடையவர்கள்.
உதவும் குணம் கொண்டவர்கள்.
வாகன பிரியர்கள்.
அங்கஹீன யோகம் :
பனிரெண்டாம் அதிபதி கேந்திர திரிகோண வீடுகளில் ராகுவுடன் இணைவதால் உண்டாவது அங்கஹீன யோகம் ஆகும்.
அங்கஹீன யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
உடல் உறுப்புகளில் ஏதாவது குறை உண்டாகும்.
லக்ன கர்மாதிபதி யோகம் :
லக்னாதிபதியும் பத்தாம் அதிபதியும் ஏதாவது வீடுகளில் இணைவது அல்லது பார்வை மற்றும் சேர்க்கை மூலம் பலம் பெறுவதால் உண்டாவது லக்ன கர்மாதிபதி யோகம் ஆகும்.
லக்ன கர்மாதிபதி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
பிறரின் உதவியின்றி தன் வாழ்க்கையில் தானே முன்னேறுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக