Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 8 ஜனவரி, 2020

மூக்கையூர் கடற்கரை..!

சாயல்குடியிலிருந்து ஏறத்தாழ 6கி.மீ தொலைவிலும், ராமநாதபுரத்திலிருந்து ஏறத்தாழ 63கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இயற்கை எழில் மிகு இடமாக மூக்கையூர் கடற்கரை திகழ்கிறது.

சிறப்புகள் :

 ராமநாதபுரம் மாவட்டத்தில் எழில்மிகு தோற்றத்தில் காட்சியளிக்கும் விதமாக இந்த கடற்கரை அமைந்துள்ளது.

 அழகான நீண்ட கடற்கரையாகவும், கரையை மோதி திரும்பும் அலைகளும், அமைதியான சூழலில் அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இந்தக் கடற்கரைக்கு வருகைத் தருகிறார்கள்.

 இந்த கடற்கரை மணற்பரப்புகள் நிறைந்த இடமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஏற்ற இடமாகவும் விளங்குகிறது.

 இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சூரிய மண் குளியலில் ஈடுபட ஆர்வமாக இருக்கிறார்கள்.

 இந்தக் கடற்கரையின் பிரபலமாக கடலும், ஆறும் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் உள்ள மணலை சுற்றுலாப் பயணிகள் உடல் முழுவதும் பூசிக் கொண்டு சூரியக் குளியல் செய்து வருகிறார்கள்.

இக்கடற்கரைக்கு அருகே புலுவினி சல்லித்தீவு, உப்புத்தண்ணி தீவு, நல்ல தண்ணி தீவு போன்ற இடங்களும் அமைந்துள்ளன.

 கமுதி குண்டாறு, சாயல்குடி மலட்டாறு போன்றவை இந்தக் கடலில் கலக்கின்றன.

 குடும்பங்கள் மற்றும் நண்பர்களோடு குழுவாகச் சென்று காலை அல்லது மாலை நேரங்களில் சூரியக் குளியலில் ஈடுபடலாம். இவ்வாறு செய்தால் உடலில் உள்ள வெப்பம் தணிந்து நமக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.

எப்படிச் செல்வது?

ராமநாதபுரத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

எப்போது செல்வது?

அனைத்துக் காலங்களிலும் செல்லலாம்.

எங்கு தங்குவது?

ராமநாதபுரத்தில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

இதர சுற்றுலாத்தலங்கள் :

அரியமான் கடற்கரை.
 பாம்பன் பாலம்.
 தனுஷ்கோடி.
 நீர் பறவை சரணாலயம்.
 ராமநாதசுவாமி கோவில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக