உலகம் முழுவதும் நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக்
கொண்டே வருகிறது. முன்பெல்லாம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்தான் அதிகமாக
நடந்து கொண்டிருந்தது. சமீப ஆண்டுகளாக ஆண்களுக்கு எதிராகவும் பாலியல் குற்றங்கள்
அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்துள்ள சம்பவம் அந்த நாட்டையே
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த வாரம் ரெய்ன்ஹார்ட் சினாகா
என்னும் 36 வயது ஆணுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து
தீர்ப்பளித்தது. அவர் மேல் சுமத்தப்பட்ட குற்றம் ஆண்களின் மீது அவர் நிகழ்த்திய
மோசமான பாலியல் வன்முறையும், வன்கொடுமைகளும்தான். 48 ஆண்களை பாலியல் சித்திரவதை
செய்ததற்காக சினாகாவிற்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவரால்
பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை 195 ஆகும். இந்த அதிர்ச்சிகரமான
சம்பவத்தைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரெய்ன்ஹார்ட் சினாகா
36 வயதான ரெய்ன்ஹார்ட் சினாகா, இரவு
விடுதிகளுக்கு வெளியே ஆண்களை சந்தித்து அவர்களை தங்களின் குடியிருப்புகளுக்கு
தந்திரமாக அழைத்துச் சென்று அவர்களுக்கு போதைப்பொருளை கொடுத்து அவர்களை பாலியல்
வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதனை தன்னுடைய செல்போனில் படம் பிடித்தும் வைத்துள்ளார்.
இவரை " பிரிட்டிஷ் வரலாற்றின் மிக மோசமான கற்பழிப்பு குற்றவாளி " என்று
குறிப்பிடுகிறார்கள்.
விசாரணை
சினாகா வழக்கு கடந்த இரண்டு வருடமாக
நடந்து வந்தது, சினாகாவின் அடையாளம் மற்றும் அவரது குற்றங்கள் குறித்த விவரங்கள்
திங்கள்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படவில்லை, ஏனெனில் நீதிமன்றங்கள் அவரது
நான்காவது குற்றவியல் வழக்கு முடிவடையும் வரை இரண்டு ஆண்டு ஊடக இருட்டடிப்புக்கு
உத்தரவிட்டன.
குற்றங்கள்
காவல்துறையினரின் விசாரணையின் படி
சினாகா பல ஆண்டுகளாக 195 ஆண்களின் மீது பாலியல் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக சந்தேகிக்கின்றனர்.
விசாரணைக்குப் பிறகு இவரின் மீது 159 பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டது, இதில்
136 கற்பழிப்புகளும் அடங்கும். இந்த வழக்கு பிரிட்டனில் மிகப்பெரிய கற்பழிப்பு
விசாரணைக்கு வழிவகுத்தது.
சினாகாவின் போன்
தான் ஆண்களை பாலியல் வன்கொடுமை
செய்வதை சினாகா தன்னுடைய செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தார். சினாகாவின்
போனில் அவர் 70 ஆண்களை வன்கொடுமை செய்யும் வீடியோக்கள் இருந்தது, அதில்
இருப்பவர்களை அடையாளம் காண காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர் என்று
பிரிட்டிஷ் பத்திரிகைகள் தெரிவிக்கிறது.
தீர்ப்பு விவரம்
திங்களன்று தீர்ப்பளிக்கப்பட்டபோது,
நீதிபதி சுசேன் கோடார்ட் சினாகாவை "ஒரு மோசமான தொடர் பாலியல் வேட்டையாடுபவர்,
நகர மையத்திற்குள் வந்த இளைஞர்களை வேட்டையாடினார், அவர்கள் தங்கள் நண்பர்களுடன்
ஒரு நல்ல இரவைத் தவிர வேறொன்றையும் விரும்பவில்லை". மேலும் "உங்கள்
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உங்களை ஒரு அரக்கன் என்று வர்ணித்தார். நீங்கள்
செய்த குற்றத்தின் அளவும் அளவும் இது ஒரு துல்லியமான விளக்கமாக
உறுதிப்படுத்துகிறது. "
சினாகாவின் செயல்முறை
மான்செஸ்டர் சிட்டி சென்டர்
அபார்ட்மெண்ட் அருகே இரவு விடுதிகளை விட்டு வெளியேறும் ஆண்களைச் சந்திப்பதே
சினாகாவின் செயல் முறை. காவல்துறை மற்றும் நீதிமன்ற சாட்சியங்களின்படி, அவர்
பொதுவாக உடல்நிலை சரியில்லாமல் அல்லது போதையில் இருந்த இளைஞர்களை குறிவைத்தார்.
பின்னர் அவர்களிடம் நல்லவர் போல நடித்து, அவர்களிடம் இன்னொரு ட்ரிங்க் குடிக்கலாம்
என்று தனது குடியிருப்புக்கு அழைத்துச் சென்று அவர்கள் கவனிக்காத நேரத்தில்
அவர்களுக்கு போதை மருந்தை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்வார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர் எப்பொழுது போதைமருந்து கொடுத்தார் என்பதே
தெரியவில்லை என்று கூறினார்.
எப்படி சிக்கினார்?
2017 ஆம் ஆண்டில் கடைசியாக
பாதிக்கப்பட்ட ஒருவர் பாலியல் வன்கொடுமையின் போது மயக்கம் தெளிந்து காவல்துறைக்கு
போன் பண்ணினார். இப்படித்தான் இந்த மிகப்பெரிய கற்பழிப்பு குற்றவாளி சிக்கினார்.
காவல்துறையினர் சினாகாவைக் கைதுசெய்து, அவரது தொலைபேசிகளை பறிமுதல் செய்து, அவருக்கு
எதிரான ஆதாரங்களை கண்டுபிடித்தனர். ஆனால் சினாகா தன் மீதான பாலியல் குற்றங்களை
முற்றிலும் மறுத்தார், அவர்கள் விருப்பப்பட்டுத்தான் வந்தததாக கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள்
பாதிக்கப்பட்டவர்களின் அறிக்கைகள்
நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டதாக பிபிசி தெரிவித்துள்ளது, ஒரு நபர்
தாக்குதலுக்குப் பிறகு தற்கொலை செய்ததாக உணர்ந்ததாகவும், மற்றொருவர் சினாகா
"சிறையிலிருந்து ஒருபோதும் வெளியே வரக்கூடாது, அவர் நரகத்தில் வாழ
வேண்டும்" என்றும் கூறுகிறார்.
சினாகாவின் பூர்வீகம்
சினாகா 2007 ஆம் ஆண்டில் மாணவர்
விசாவில் இந்தோனேசியாவிலிருந்து பிரிட்டனுக்கு வந்தார். அசோசியேட்டட் பிரஸ் படி,
சினாகா மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இரண்டு பட்டங்களைப் பெற்றார், மேலும் அவர்
2017 இல் கைது செய்யப்பட்டபோது லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக