உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உடல் எடையும் தான் சிறந்த நோயற்ற
வாழ்விற்கு வழிவகுக்கிறது. குறிப்பாக, டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படாமல் தப்பிக்க
இது மிகவும் அவசியமான ஒன்று. டைப் 2 நீரிழிவு நோய் என்பது வாழ்நாள் நோயாகும்.
ஏனென்றால், இந்த நோய் ஒருவருக்கு ஏற்பட்டால், அவர் வாழ்நாள் முழுவதும் இன்சுலின்
போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதாக இருக்கும்.
இன்றைய காலக்கட்டத்தில் ஓடி ஆடி வேலை
செய்வது என்பது அரிதான ஒன்றாக மாறிவிட்டது. உட்கார்ந்த இடத்தில் இருந்தே வேலை,
சம்பளம், சாப்பாடு, மருந்து என அனைத்தும் வந்து விடுவதாலோ என்னவோ, நோய்களும்
அதிகரித்து விட்டன. உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை தான் டைப் 2 நீரிழிவு நோய்க்கு
அஸ்திவாரம் ஆகும்.
சீரற்ற உணவு பழக்கம், உடலுழைப்பின்மை
மற்றும் அதிக பருமன் போன்ற பிரச்னைகள் தான் பல்வேறு நோய்களுக்கு முக்கிய காரணம்.
அதனால் தான் உடலியக்கம் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. உடற்பயிற்சி செய்வதன்
மூலம் இரத்தத்தில் உள்ள குளுகோஸானது தசைகளால் பயன்படுத்தி கொள்ளப்படும்.
இதன்மூலம், நீரிழிவு நோய் ஏற்படாமலும், தீவிரமடையாமலும் சுலபமாக தடுத்திட
முடியும்.
நீரிழிவு
நோய்க்கு உடற்பயிற்சி ஏன் மிகவும் அவசியமான ஒன்று?
நீரிழிவு நோயால்
அவதிப்படுபவர்களுக்கு, உடற்பயிற்சி செய்வதால் கிடைத்துவிடும் முக்கிய நன்மை
என்னவென்றால், நோயை தீவிரமடையாமல் தடுப்பது தான். உடற்பயிற்சியானது, உடல் எடையை
கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தத்தை சீராக்கி, பதற்றம் ஏற்படாமல் தடுத்து,
உடல்நலத்தை மேம்படுத்த உதவும். வல்லுநர்களின் அறிவுரை என்னவென்றால், நீரிழிவு நோய்
உள்ளவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்ய
வேண்டும் என்பது தான்.
உடற்பயிற்சி செய்வதால், இரத்தத்தில்
உள்ள குளுகோஸின் அளவு குறைந்து, தசைகளுக்கு இன்சுலின் இல்லாத குளுகோஸை பெற
உதவிடும். மேலும், உடற்பயிற்சி செய்து உடல் எடை குறைக்கும் போது, மேலும் பல
ஆரோக்கிய பலன்களும் கிடைத்திடும். எனவே, உடற்பயிற்சி செய்வது நீரிழிவு நோய்
உள்ளவர்கள் சிறந்த முன்னேற்றத்தை கொடுக்கும். அதுமட்டுமல்லாது, உடலில் நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து பல்வேறு நோய்களில் இருந்தும் உடலை
காத்திடும். அதாவது,
* டைப் 2 நீரிழிவு நோய்
* இதய நோய்
* பக்கவாதம்
* புற்றுநோய் மற்றும் பிற நாள்பட்ட
நோய்கள் போன்றவற்றில் இருந்து காத்திடும்.
தொடர்
உடற்பயிற்சியால் கிடைக்கும் பிற நன்மைகள்:
* குறைந்த இரத்த அழுத்தம்
* உடல் எடையை சீராக்குவது
* நல்ல கொழுப்பு சத்தை அதிகரிக்கச்
செய்வது
* எலும்பு மற்றும தசைகளுக்கு வலு
சேர்ப்பது
* தூக்கமின்மையை போக்குவது
* மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது
* மனஅழுத்தத்தை விரட்டுவது
* முதுமை மற்றும் அல்சைமர் நோய்க்கான
ஆபத்தை குறைப்பது
உடற்பயிற்சியின் சிறந்த அம்சம்
என்றால், உங்களது வேலை மற்றும் நேரத்திற்கேற்ப நீங்களே அதனை மாற்றி செய்து
கொள்ளலாம்.
#1:
மருத்துவரின் அனுமதி
உங்களது வாழ்க்கை முறையில் ஏதேனும்
மாற்றத்தை கொண்டு வருவதற்கு முன்னதாக உங்களது மருத்துவரின் அனுமதியை பெற வேண்டியது
அவசியம். நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை முதலில் உங்கள் மருத்துவர்
தெரிந்து கொள்ள வேண்டும். அதை பொறுத்து உணவு மற்றும் மருந்தில் ஏதேனும் மாற்றம்
தேவைப்பட்டால் அவர் அறிவுறுத்துவார்.
#2:
இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து சரிபார்ப்பது
ஒருவேளை ஒரு மணி நேரத்திற்கும் மேல்
உடற்பயிற்சி செய்ய நீங்கள் திட்டமிட்டிருந்தால் இரத்த சர்க்கரையின் அளவை அவ்வபோது
சரிபார்த்துக் கொள்வதே சிறந்தது. குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடற்பயிற்சி
செய்யும் போது சாப்பிட அருகில் ஏதாவது வைத்து கொள்வது நல்லது.
#3:
ஆரம்பமே நீண்ட நேரம் வேண்டாம்
உடற்பயிற்சி செய்ய தொடங்கும் போது,
முதலில் 10-15 நிமிடங்களுக்கு செய்ய ஆரம்பியுங்கள். பின்னர், சுறுசுறுப்பை
பொறுத்து கணிசமாக நேரத்தை 30 நிமிடங்களுக்கோ அல்லது அதற்கு மேலோ கூட்டுங்கள்.
#4:
வலிமை பயிற்சி மிகவும் முக்கியம்
வலிமை பயிற்சி என்பது அதிகப்படியான
உடல் அசைவை கொண்டது. அதன்மூலம், தசைகளை உருவாக்கிட முடியும். டைப் 2 நீரிழிவு நோய்
உள்ளவர்கள், கொழுப்பு சேர்ந்த இடத்தில் தசையை உருவாக்குவது என்பது மிகுந்த நன்மை
பயக்கும். எவ்வளவு தசையை உருவாக்குகிறோமோ, அந்தளவிற்கு இரத்தத்தில் குளுகோஸ் அளவை
கட்டுப்படுத்திட முடியும்.
#5: பழக்கமாக கொள்ளுங்கள்
செய்வதை விட சொல்வது மிகவும் எளிது
தான். ஆனால், இது ஒன்று செய்து காட்ட முடியாத அளவிற்கு பெரிய விஷயம் அல்ல. நல்ல
ஆரோக்கியமான உடலை பெற்று நோய்களில் இருந்து விடுபட்டே ஆக வேண்டும் என்ற மன உறுதியை
கொண்டால், உங்களை யாராலும் தடுத்திட முடியாது. ஆரோக்கியமான உணவை உட்கொண்டு,
தொடர்ந்து உடற்பயிற்சியை செய்து வந்தாலே நீங்கள் நிச்சயம் நீரிழிவு நோயின்
தாக்கத்தில் இருந்து சுலபமாக தப்பித்து விடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக