Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

பீர் குடிப்பவர்கள் கவனத்திற்கு.! 15 ஆயிரம் நஷ்ட ஈடாக பெற்ற வாடிக்கையாளர்.!


பீர் குடிப்பவர்கள் கவனத்திற்கு.! 15 ஆயிரம் நஷ்ட ஈடாக பெற்ற வாடிக்கையாளர்.!


திருநெல்வேலி மாவட்டத்தில் அமிர்தம் என்ற பெயரில் தனியார் மதுபான கடை ( பார்) ஒன்று இயங்கி வருகிறது. அங்கு வழக்கமாக வரும் வெங்கடேஷ் என்பவர் பீர் வாங்கி குடித்துள்ளார். 

அப்போது அவர் குடித்த பீருக்கு கூடுதலாக 240 ரூபாய் வசூலித்த கடை நிறுவுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பீரின் விலையை விட கூடுதலாக வசூலித்த அமிர்தம் தனியார் மதுபான பார் மீது வெங்கடேஷ், நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிக விலைக்கு பீர் விற்பனை செய்த தனியார் மதுபான விற்ற பாருக்கு அமிர்தம் பாருக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அதை வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.10,000, வழக்கு செலவாக ரூ.5,000 தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவல்துறை அதிகாரிகள் அந்த தனியார் மதுபான விடுதியை சோதனையிட்டு நடவடிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக