கடந்த மாதம் 27-ம் தேதி தெலுங்கானா மாநிலம்
ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா நான்கு பேரால் பாலியல்
வன்கொடுமைசெய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் நாடு முழுவதும்
அதிர்வை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை
குறையவும் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ஆந்திரமாநில
அரசு புதிய சட்டத்தை கொண்டுவர முடிவு செய்தது.
அதன்படி “திஷா” சட்டம் ஆந்திர மாநில
சட்டசபையில் கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி நிறைவேற்றப்பட்டது .இந்த சட்டம்
பாலியல் வழக்குகளை 14 நாட்களுக்குள் விசாரித்து 21 நாட்களுக்குள் தண்டனை
கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் “திஷா” சட்டத்தின்
சிறப்பு அதிகாரிகளாக கிருத்திகா சுக்லா ஐ.ஏ.எஸ். மற்றும் எம். தீபிகா ஐ.பி.எஸ்.
ஆகியோரை அம்மாநில அரசு நியமித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக