குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில
பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை எதிர் கட்சிகள் ஒன்று திரண்டு
நடத்துகின்றனர் என்றும் மக்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து சரியான
புரிதல் இல்லை என பாஜகவினர் குற்றம்சாட்டி வந்தனர். அதேசமயத்தில் இளைஞர்களை
எதிர்கட்சியினர்கள் தவறாக வழிநடத்துகின்றனர் எனவும் குற்றச்சாட்டு முன்
வைக்கப்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டம்
இந்த நிலையில் பாஜகவினர் குடியுரிமை
திருத்தச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை
கையில் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த சட்டத்தால் இந்தியர்கள் எவருக்கும் பாதிப்பு
இல்லை என்பது குறித்தும் சட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் மக்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு இன்ச் கூட பின் வாங்க மாட்டோம்:
அமித்ஷா
ராஜஸ்தானில் நடைபெற்ற குடியுரிமை
திருத்தச் சட்ட ஆதரவு கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை
திருத்த சட்டம் குறித்து விவாதிக்கத் தயாரா என ராகுல் காந்திக்கு சவால் விடுத்தார்.
அதோடு ராகுலுக்கு புரியும் விதத்தில் இத்தாலிய மொழியில் குடியுரிமை திருத்த
சட்டத்தை மொழிபெயர்க்கவும் தயார் என குறிப்பிட்டிருந்தார். மேலும் குடியரிமை
திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என ஆணித்தரமாக
தெரிவித்தார்.
8866288662 என்ற தொலைபேசி எண்
அந்தச் சட்டத்துக்கு ஆதரவு
தெரிவிப்போா் மிஸ்டு கால் விடுக்கும் வகையில் 8866288662 என்ற தொலைபேசி எண்
கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், அது ஆதரவு வாக்காக
பதிவாகும்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
இதுதொடா்பாக அவா் மேலும் பாஜக பொதுச்
செயலா் அனில் ஜெயின் கூறியதாவது, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு
திரட்டும் வகையில் வரும் 5-ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு மாபெரும் மக்கள்
சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு முன்னதாக இந்த
இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு
ஆதரவு
சுமார் 10 நாள்கள் நடைபெறும் மாபெரும்
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை டெல்லியில் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி
வைப்பாா் என்று கட்சியினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அப்போது, டெல்லியில்
உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அவா் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு
திரட்டுவாா் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து தரப்பு மக்களிடமும் ஆதரவு
இந்த 10 நாள் பிரசாரத்தின்போது,
அனைத்து தரப்பு மக்களிடமும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்காக பாஜக தலைவா்கள்
மற்றும் தொண்டா்கள் ஆதரவு திரட்ட உள்ளனா். மத்திய அமைச்சா்கள் முதல் கட்சி
நிா்வாகிகள் என அனைத்து தரப்பினரும் நாடு முழுவதும் பயணித்து இந்தப் பிரசாரத்தில்
பங்கேற்பாா்கள்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள்
தவறான தகவல் பரப்புகின்றன
குடியுரிமை திருத்த சட்டத்துக்கான
தங்களது ஆதரவை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிக்குமாறு இந்தப் பிரசாரத்தின்போது
மக்களிடம் வலியுறுத்தப்படும் எனவும் அந்தச் சட்டம் தொடா்பாக காங்கிரஸ் உள்ளிட்ட
எதிா்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என்று அனில் ஜெயின் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக