Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 29 ஜனவரி, 2020

பிறந்த 4 நாட்களிலே பெற்ற குழந்தையை 5 லட்சத்துக்கு விற்ற பெற்றோர்.! வளைத்து பிடித்த ஊர்மக்கள்.! பின்னர் நடந்தது என்ன.?

பிறந்த 4 நாட்களிலே பெற்ற குழந்தையை 5 லட்சத்துக்கு விற்ற பெற்றோர்.! வளைத்து பிடித்த ஊர்மக்கள்.! பின்னர் நடந்தது என்ன.?


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பெரியகல்லுவயலைச் சேர்ந்த காடப்பன் செல்வி தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்த நிலையில்,
கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நான்காவதாக பிறந்த 9 மாத ஆண் குழந்தையை பிறந்த நான்கு நாட்களிலேயே 5 லட்ச ரூபாய்க்கு பெற்றோர் விற்பனை செய்ததாக, அங்குள்ள ஒருவர் குழந்தைகள் நல அலுவலருக்கு புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பான புகாரை அடுத்து சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்த சம்பவ இடத்திற்கு சென்றபோது, காலப்பனும் அவரது மனைவி செல்வியும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
இந்நிலையில், குழந்தை மற்றும் பெற்றோரை ஒப்படைப்பதாக ஊர் மக்கள் தகவல் தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். பிறகு சில மணி நேரத்திலேயே வீட்டிற்கு வந்த பெற்றோர் மற்றும் குழந்தையை ஊர்மக்கள் சுற்றி வளைத்த பிடித்து அவர்களை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் அங்கு குழந்தையின் பெற்றோரிடம் குழந்தைகள் நல தலைவர் ஸ்டெல்லா புஷ்பராணி தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் இளையராஜா ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் குழந்தையின் பெற்றோர்கள் முரண்பாடான பதில்கள் கூறியதால், சந்தோகமடைந்த சைல்டு லைன் அமைப்பினர், காவல் துறையினரிடம் அவர்களை ஒப்படைத்து விசாரணை மேற்கொள்ள அனுப்பி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக