Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 29 ஜனவரி, 2020

தளபதி விஜயின் புதிய படம் குறித்த தகவல்!

 தளபதி விஜயின் புதிய படம் குறித்த தகவல்!
ளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், விஜய் சேதுபதி, சந்தனு மற்றும் மாளவிகா மோகன் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதனையடுத்து, விஜய்யின் 65வது படத்தை சுதா கொங்காரா இயக்க இருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!