Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 29 ஜனவரி, 2020

பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளை சரிசெய்ய இயற்கை குறிப்புகள்...!!

Patha vedippu

பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தைபடும் பலர் அதற்கான காரணம் தெரியாமல் கடைகளில் கிடைக்கும் கண்ட க்ரீம்களை வாங்கி பூசுகின்றனர். இதற்கு காரணம் பாதங்களை சுத்தமாக பாதுகாப்பதில் கவனம் செலுத்தாததே காரணம் ஆகும்.
வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துவார்கள். வீட்டில் பாத்திரம் கழுவுவது சோப்பு போடுவது  வீட்டை கழுகி சுத்தம் செய்வது தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்கள் கால்கள் அதிகளவு ஈரமாக இருக்கும். உப்பு  தண்ணீர் அதிகளவில் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்பு புண்ணாக மாறி வலியை உண்டாக்கும்.
 மருதாணி இலைகளை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் போட்டு உலர விடவேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்தவெடிப்பு குணமாகும்.
 வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும். தரம் குறைவான காலணிகளை பயன்படுத்தினாலும் சிலருக்கு வெடிப்பு ஏற்படும்.  எனவே காலணிகள் வாங்கும் போது தரமானதாக பார்த்து வாங்க வேண்டும்.
 விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து  பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும். வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள்  பொடியை கலந்து பேஸ்ட் போல குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.
 பாதங்கள் பித்த வெடிப்புடன், வறண்டு காணப்பட்டால், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெயை சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் பாதங்களை, 10 நிமிடம் வரை ஊற வைத்து கழுவிய பின், அந்த பேஸ்ட்டை பாதத்தில் தேய்க்கவும். அப்படி செய்யும் போது,  பாதங்களில் உள்ள இறந்த அணுக்கள் நீங்கிவிடும்.
 பித்த வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது, வெறும் தேன் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவலாம். இதை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், பித்த வெடிப்புகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். மேற்கூறியவற்றை தினமும், நேரம்  கிடைக்கும் போது செய்து வந்தால், நிச்சயம் பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகள் நீங்கி, பாதங்கள் அழகாக மாறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக