Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 29 ஜனவரி, 2020

நிர்பயா வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு உறுதி ! மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

#Breaking : கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவர் …! எதிராக குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு


டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதன் பின்னர் குற்றவாளிகளாக  ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி  22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம்  நீதிமன்றம் அறிவித்தது.
இதன் காரணமாக  குற்றவாளிகள் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு  மனு  தாக்கல் செய்தனர்.அவர்களது  சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை  முகேஷ் சிங் அனுப்பினார்.ஆனால் முகேஷ் சிங்கின் கருணை மனுவை டெல்லி ஆளுநர் அனில் பைஜால் நிராகரித்தார்.மேலும் கருணை மனுவை  உள்துறை அமைச்சகமும் நிராகரித்தது.குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.இதற்கு இடையில் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுஎனவே கருணை மனு நிராகரிக்கப்பட்டதை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முகேஷ் சிங் மனு தாக்கல் செய்தார்.அவரது மனுவில் பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில் தனது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் நேற்று நடைபெற்ற விசாரணையில்,இரு தரப்பு வாதத்தை கேட்ட உச்சநீதிமன்றம்,முகேஷ் தொடர்ந்த வழக்கில்  இன்று  தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது.இதனால் இன்று நடைபெற்ற விசாரணையில் ,குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முடிவு சரியானதே என்று கூறி முகேஷ் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.இதனால் மனு தள்ளுபடியானதால் முகேஷ் சிங் தூக்கிலிடப்படுவது உறுதியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக