நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. அந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஒரு வீட்டில் லிப்ட் ஒன்று 70 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த புனித் அகர்வால் தனது குடும்பத்தாருடன் தனது வீட்டில் புத்தாண்டு கொண்டாடியுள்ளார். புத்தாண்டு கொண்டாட்டம் முடிவடைந்ததும் தனது குடும்பத்துடன் லிப்டில் ஏறியுள்ளார்.
அவருடன் இணைத்து மகள் பாலக் அகர்வால், மருமகன் பலகேஷ் அகர்வால், பேரன் நவ், உறவினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர் அப்போது எதிர்பாராதவிதமாக லிஃப்ட் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் 70 அடி உயரத்தில் இருந்த அந்த லிஃப்ட் சரசரவென கீழே விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் பலியாகினர். சம்பவ இடத்திலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக இறந்துவிட்டனர்.
இந்த சம்பவத்தில் நித்தி என்கிற உறவு பெண் மட்டும் உயிருக்கு போராடி சிகிச்சை பெற்று வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக