டிக் டாக்கில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமாவது சாதாரணமாக நடக்கும். அதில் பிரபலங்களும், டிக் டாக்கில் கவனம் செலுத்தி வருவது உண்டு.
அதை போன்று ஆந்திர மாநில பெண் துணை முதலமைச்சரான புஷ்பா ஸ்ரீவாணி, அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை புகழும் படியாக வெளியிட்டுள்ள டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
ஆந்திர மாநில முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றபோது, அவரை புகழும்படியாக “ராயலசீமா முத்துப்பிட்ட மன ஜெகன் அண்ணா” என்ற தெலுங்கு பாடல் அவரது கட்சி சார்பில் முன்பு வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், பெண் துணை முதலமைச்சர் புஷ்பா ஸ்ரீவாணி, அந்த பாடலுக்கு நடித்து டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக