ஊரக
உள்ளாட்சி தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தருமபுரி,
நாமக்கல், சிவகங்கை ஆகிய பகுதிகளில் தபால் வாக்குகளில் பல செல்லாது என
அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் புதிதாக பிரிக்கப்பட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்தில் 135 தபால் வாக்குகளில் 85 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 118 தபால் வாக்குகளில் 96 வாக்குகளும், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 60 தபால் வாக்குகளில் 58 வாக்குகள் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக