புத்தாண்டு
தினத்தில் பரிசாக ஒன்றை இளைஞர் ஒருவர் கேட்க அவரது ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார்
பிரதமர் மோடி.
குஜராத் முதல்வராக பதவி வகித்தபோது முதன்முதலாக ட்விட்டர் கணக்கை தொடங்கினார் நரேந்திர மோடி. ட்விட்டர் மூலம் பலரது கருத்துகளுக்கு பதில் அளிப்பது, மக்களுடன் உரையாடுவது, கருத்துக்கள் தெரிவிப்பது என ட்ரெண்டிங்கில் இருக்கும் உலக அரசியல்வாதிகளில் பிரதமர் மோடியும் ஒருவர்.
இதனாலேயே இந்தியாவில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட அரசியல்வாதியாக பிரதமர் மோடி முதல் இடத்தில் உள்ளார். உலக அளவில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் ட்ர்ம்புக்கு பிறகு மூன்றாவது இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார்.
இந்நிலையில் நெடுநாளாக பிரதமர் மோடியை பின் தொடரும் ஒருவர் தனது ட்விட்டர் பதிவில் பிரதமரை குறிப்பிட்டு ”மதிப்பிற்குரிய பிரதமரே, நான் உங்கள் தீவிர ரசிகன். இந்த புத்தாண்டில் எனக்கு ஒரு பரிசு தருவீர்களா? தயவு செய்து எனது டிவிட்டர் கணக்கை ஃபாலோ செய்யவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் கணக்கை ஃபாலோ கொடுத்த பிரதமர் அதை ரீட்வீட் செய்து ”செய்துவிட்டேன். இந்த வருடம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கட்டும்” என கூறியுள்ளார். தற்போது இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Done so. Have a
great year ahead :) https://t.co/1OfvIq1RtN
— Narendra Modi (@narendramodi) January 1, 2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக