Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 11 ஜனவரி, 2020

வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

 Image result for வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?"
குளிர்ந்த நீரைக் குடிப்பது அனைவருக்கும் பழக்கம் ஆகிவிட்டது. ஆனால் காய்ச்சல், சளி, இருமல் என்றால் மட்டும் வெந்நீரை அருந்துவார்கள்.

 உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் காலையில் மட்டும் வெந்நீர் குடித்து வருவார்கள். வெந்நீர் அருந்துவது எடையைக் குறைக்க மட்டும் அல்லாமல் உடலிற்கு ஆரோக்கியத்தை தரும் ஆற்றல் உடையது.

 நம் அன்றாட வாழ்க்கைக்கு உணவு, உடை, இருப்பிடம் அவசியமாக இருப்பது போல் தண்ணீர் மிகவும் அவசியமாக உள்ளது.

 உடல் வெப்பநிலையைப் பராமரிக்க, ஊட்டச்சத்துக்களை உடலில் சேர்க்க, நச்சுக்களை அகற்ற என நீர் ஏராளமான வேலைகளை நமக்குள் செய்கிறது.

 இரண்டு ஆக்ஸிஜனும் ஒரு ஹைட்ரஜனும் சேர்ந்தது நீர் எனப் படித்திருப்போம். அது மட்டுமல்ல, நாம் அருந்தும் நீரில் சோடியம், கால்சியம், மக்னீசியம், தாமிரம் எனப் பல்வேறு தாது உப்புக்கள் கலந்திருக்கின்றன. இப்படி, பல நன்மைகளை அள்ளித் தரும் நீரைக் கொதிக்கவைத்து அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? என்று பார்ப்போம்.

வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் :

 காலையில் எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நம் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும். வயிற்றைச் சுத்தப்படுத்துவதில், வெந்நீருக்கு இணை எதுவும் இல்லை.

நம் உடல்நலத்தை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வது எப்படி? என்பது பற்றிய சந்தேகங்கள் உங்களுக்கு இருக்கிறதா?

வெந்நீர் அருந்துவதால் அதிகமாக வியர்வை ஏற்படும். இதனால், நம் உடலின் செல்களில் உள்ள நீர் சத்து மற்றும் உப்புச் சத்து முதலான கழிவுகள் வெளியேறுகின்றன. இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

 அளவுக்கு அதிகமான அசைவ உணவு அல்லது சுவீட், பூரி, வடை, போண்டா, பஜ்ஜி போன்ற பலகாரங்கள் சாப்பிட்ட பிறகு, வெந்நீரை பருகினால் கொழுப்புகளை உடலில் சேரவிடாமல் கரைத்துவிடும். மேலும் வெந்நீர் இதயத்துக்கு மிகவும் நல்லது.

 மூக்கு அடைப்புக்கு சிறந்த மருந்து வெந்நீர் தான். வெந்நீரில் மஞ்சள் தூள் சேர்த்து ஆவி பிடித்தால் மூக்கடைப்பு குணமாகும்.

 வெயிலில் அலைந்து விட்டு வீட்டுக்கு வந்தவுடன் குளிர்ந்த நீரை அருந்துவதைவிட வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தினால் தாகத்தை தீர்க்கும்.

 மேலும், கால் பாதங்களில் வலி ஏற்பட்டால் பெரிய வாளியில் கால் சூடு பொறுக்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் கல் உப்பைப் போட்டு, அதில் சிறிது நேரம் பாதத்தை வைத்து எடுத்தால் கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.

 மழையில் நனைந்து வீட்டிற்கு வந்தால் தலை, உடம்பை துடைத்து விட்டு இரண்டு டம்ளர் வெந்நீரைக் குடித்தால் சளி, இருமல் போன்ற தொல்லைகள் வராது.

தினமும் வெந்நீர் குடித்து வந்தால் உடல் சீராக செயல்படுவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக