Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 2 ஜனவரி, 2020

என்னைய மன்னிச்சிடும்மா! – மன்னிப்பு கேட்ட போப் பிரான்சிஸ்!

Pope



சீர்வாதம் வாங்க முயன்ற பெண்ணின் கையை தட்டிவிட்டதற்காக போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

புத்தாண்டுக்கு முதல் நாளான டிசம்பர் 31 அன்று போப் பிரான்சிஸ் வாட்டிகன் நகரத்து மக்களை பார்ப்பதற்கு சென்றார். அங்கே கூட்டத்தில் இருந்த ஒரு குழந்தையை போப் தொட்டு ஆசீர்வதித்தார். அப்போது ஆசீர்வாதம் வாங்க விரும்பிய பெண் ஒருவர் போப் பிரான்சிஸின் கரங்களை பிடித்துள்ளார்.

போ பிரான்சிஸ் அந்த பெண்ணிடமிருந்து கையை விடுவித்து கொள்ள அந்த பெண்ணின் கையை தட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. போப்பின் இந்த செயல் பலருக்கு அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில் செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் பேசிய போப் தனது செயலுக்காக அந்த பெண்ணிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார். சில நேரங்களில் தானும் பொறுமை இழந்துவிடுவதாக போப் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக