சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து
கொண்ட நெல்லை கண்ணன், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர்
குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
என தமிழக பாஜகவினர் நேற்று சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தினர். இதனால்
மெரீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதையடுத்து
நெல்லை கண்ணன் போலீசாரால் கைது செய்யப்பட்டு நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 13 ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி
உத்தரவிட்டுள்ளார்.
இந்த
நிலையில் நெல்லை கண்ணனை விடுதலை செய்யவில்லை எனில் மெரீனாவில் போராட்டம்
நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழர்
வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட ஒருசில கட்சியின் தலைவர்கள்
அறிவிப்பு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என பாஜகவினர்
போராட்டம் நடத்திய அதே இடத்தில் நெல்லை கண்ணனை விடுதலை செய்ய வேண்டும் என
போராட்டம் நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக